23.09.2012.By.Rajah.தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம், தங்கள் ஊரில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைப்பதற்காக லாரியில் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.
ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் சாலையில் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுகொண்டு போக்குவரத்துகக்கு இடையூறு ஏற்படுதியுள்ளனர். ஒகேனக்கல் போலிஸ் எஸ்.ஐ., நந்தகுமார் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரியை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது மது அருந்தி போதையில் இருந்த இளைஞர்கள், போலிஸ் எஸ்.ஐ.யை பார்த்து கையசைத்தபடியே சத்தம் போட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ நந்தகுமார் லாரியில் இருந்தவர்களை நோக்கி லத்தியை சுழற்றியபடியே மிரட்ட சென்றுள்ளார். அப்போது லாரியில் இருந்தவர்கள் எஸ்.ஐ.நந்தகுமாரை கீழே தள்ளி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் கிடைத்தத்தும், அங்கு வந்த போலீசார் லாரியிலிருந்த சிலரை விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியில் வந்த மற்றும் சிலர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, போக்குவரத்து இடையூறு செய்த, பிக்கனஹள்ளியை சேர்ந்த செல்லத்துரை (22), மோகன்ராஜ் (24), ரத்தினகுமார் (20), விஜய் (21), வினோத் (19), சாம்ராஜ் (43), அண்ணத்துரை (43), மகேந்திரன் (36), சுதாகர் (31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதில், வினோத் (19), ரத்தினகுமார் (20), விஜய் (21) ஆகியோர் சங்ககிரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்