siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

அமெரிக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா தோல்வி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012,
By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான மசோதா தோல்வி அடைந்தது. அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையில் உறுப்பினர் ராண்ட் பால் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவலளித்த மருத்துவர் ஷகில் அப்ரிதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
விவாதத்துக்குப் பின் இந்த மசோதாவுக்கு 10 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், 81 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மசோதா தோல்வியடைந்தது.
மேலும் இதே மசோதாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நிகழ்ந்த லிபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும்.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்த பின் தான், நிதி உதவியைத் தொடர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது குறித்து ராண்ட் பால் கூறுகையில், இந்நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு அமெரிக்க குடிமக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது ஏன் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்