23.09.2012.By.Rajah.
இது தொடர்பான பயிற்ச்சிப்பட்டறை ஒன்று மாலை தீவின் தலை நகர் மாலேயில் இடம்பெற்றதாக மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பிரிவின் இயக்குனர் எச்.எ.கருணாரத்னா (H.A.Karunaratne) மாலை தீவில் தெரிவு செய்யப்பட்ட சில மத்திய வங்கி அதிகாரிகளிற்கு இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்கு மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்தது. இதனால், ஐ.அ.டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 110 ரூபாவில் இருந்து 134 ரூபா வரை சடுதியாக வீழ்ச்சி கண்டது.
எனினும், திறமையான வெளிநாட்டு நாணய ஒதுக்கு முகாமை மூலம் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பினை ரூ.131.60 என்ற மட்டத்தில் நிலை பெறச்செய்ய முடிந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது
மத்திய வங்கியின் வெளி நாட்டு ஒதுக்கினை திறமையாக முகாமை செய்வது எப்படி? என மாலை தீவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.