siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 செப்டம்பர், 2012

அன்று கல்விக்குப் பெயர்போன யாழ். இன்று களவுக்கு ?

24.09.2012.By.Rajah.யாழ். மாவட்டத்தில் போலியான தங்க ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபடுவோர், படப்பகலில் சங்கிலியை அறுப்போர், இரவில் வீடு புகுந்து களவெடுப்போர் என பல திருட்டுச் சம்பபவங்கள், அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ். நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் போலியான தங்க ஆபரணங்களை அடகு வைத்து 1,50,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்தவர். இதேவேளை மானிப்பாய் தனியார் வங்கியில் 2,23,000 ரூபாவுக்கு போலியான தங்க ஆபரணங்களை அடகு வைத்தமை தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைத் தேடிவருவதாகவும் கூறினார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள இலங்கை வங்கி ஒன்றில் போலியான தேசிய அடையாள அட்டையை சமர்பித்து 5 தடவைகள் வங்கியில் தங்க ஆபரணங்கள் அடகு வைத்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த 5 தடவையும் 5,49,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பாக வங்கிகளை விளிப்பாக தங்கள் சேவையை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.