வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
அர்ஜென்டினா
நாட்டில் தற்போது ஓட்டு போடும் வயது 16ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் ஓட்டு போடும் வயது 18லிருந்து 16ஆக குறைக்கப்பட்டு, செனட்
சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் நாடாளுமன்ற கீழ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டம் அமுல்படுத்தப்படும். விரைவில் அர்ஜென்டினாவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. |
வெள்ளி, 19 அக்டோபர், 2012
அர்ஜென்டினாவில் ஓட்டு போடும் வயது 16ஆக குறைப்பு
வெள்ளி, அக்டோபர் 19, 2012
செய்திகள்