வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
துப்பாக்கி சூட்டினால்
உருக்குலைந்து போன வாலிபரின் முகம், 36 மணி நேர முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பின்
தற்போது நல்ல நிலையில் செயல்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லீ நோரிஸ்(வயது 37). மன வருத்தத்தினால் 1997ம்
ஆண்டு துப்பாக்கியால் முகத்தில் சுட்டு கொண்டார். இதில் அவரது முகம் சிதைந்தது, தாடை உருக்குலைந்து போனது, மூக்கும், நாக்கும் காணாமல் போயின. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோரிஸ், தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். ஆனால் முகம் வடிவம் இல்லாமல் இருந்ததால் கோரமாக காட்சியளித்தது. இதனால் இவர் முகமூடி அணிந்து தான் வெளியே நடமாடினார். கடந்த மார்ச் மாதம் விர்ஜீனியா மாகாணத்தில் நோரிசுக்கு 36 மணி நேரம், 100 மருத்துவர்கள் கொண்ட குழு இணைந்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்தது. மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட தாடை, மூக்கு, நாக்கு ஆகியவை இவருக்கு பொருத்தப்பட்டன. கழுத்து பகுதியிலிருந்து திசுக்கள் எடுத்து முகத்தில் வைக்கப்பட்டன. இதன் மூலம் தற்போது இவரது மூக்கு, வாசனையை உணர ஆரம்பித்துள்ளது, நாக்கு சுவையை உணர்கிறது. பேச்சு மட்டும் முழுமையாக வரவில்லை. மார்ச் மாதம் முகமாற்று அறுவை சிகிச்சை முடிந்தாலும், இந்த மாதம் வரை அவர் தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் தான் இவருக்கான தொடர் சிகிச்சை முடிவுக்கு வந்தது. தற்போது அவர் முகமூடி இல்லாமல் அழகான நபராக வெளியே நடமாடும் அளவுக்கு தேறியுள்ளார். |
முகப்பு |