வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012.By.Rajah. |
ஐ.நா சபையின்
பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 5 புதிய நாடுகள்
சேர்க்கப்பட்டுள்ளன.
ருவாண்டா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, தென் கொரியா மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய 5
நாடுகளே நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை 2013ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கும். இப்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா, கொலம்பியா, ஜேர்மனி, போர்ச்சுகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி தேர்தல் நடைபெற்றது. நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில், ஐ.நா பொது சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 129 வாக்குகள் அல்லது மூன்றில் 2 பங்கு வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும், 5 நிரந்தர உறுப்பினர்களும் உள்ளனர். அஜர்பெய்ஜான், கெளதமாலா, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் டோகோ ஆகிய மற்ற நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. |
முகப்பு |