செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.மெக்சிகோவில் 72 பேரை
கொடூரமாக கொலை செய்த போதை பொருள் கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலிருந்து மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில்
மக்கள் குடிபெயர்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு குடிபெயர்ந்த மக்களில் பலர் சான் பெர்னாண்டோ நகருக்கு அருகில் ரான்சு என்னுமிடத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டில் 72 பேர்களை கொலை செய்து ஒரே இடத்தில் புதைத்திருந்தனர். இது தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பல் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடந்த விசாரணையில், இந்த கும்பல் மற்ற நாடுகளுக்கு குடிபெயர விரும்பிய நபர்களை கடத்தி, அவர்களை போதை பொருளை விழுங்க சொல்லி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்து புதைப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான சல்வேடர் அல்போன்ஸா மார்டினேஸ்(வயது 31) என்பவரை கப்பற்படை அதிகாரிகள் கைது செய்தனர். |
செவ்வாய், 9 அக்டோபர், 2012
72 பேரை கொடூரமாக கொலை செய்த நபர் கைது
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்