செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.சர்வதேச விண்வெளி
நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தனியார் விண்கலம் மூலம் ஐஸ்கிரீம் கொண்டு
செல்லப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து பூமிக்கு
மேல் 410 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட மூன்று வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தேவையான உடை, உணவு, தண்ணீர் மற்றும் சில உபகரணங்கள் உட்பட சுமார் 450 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டு தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று புறப்பட்டது. இதில் வீரர்களுக்கு பிடித்தமான வெண்ணிலா ஐஸ்கிரீம்களும் கொண்டு செல்லப்பட்டது. இந்த விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சென்றடையும். விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறோம் என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் |
செவ்வாய், 9 அக்டோபர், 2012
விண்வெளியில் இருந்தபடியே ஐஸ்கிரீமை சுவைக்க போகின்றார் சுனிதா வில்லியம்ஸ்
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்