|
|
|
|
செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.பிரிட்டனில் ஏற்கனவே
பயன்படுத்திய போத்தல்களை மறுபடியும் பயன்படுத்தவோ, பரிசாக கொடுக்கவோ கூடாது என தடை
விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மிடில்டன் ஜாம் தயாரிப்பதை பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டன.
இதனையடுத்து பிரிட்டனில் சமீப காலமாக வீட்டிலேயே ஜாம் தயாரிப்பது அதிகரித்து
உள்ளது.
அதுமட்டுமல்லாது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட போத்தல்களில் இந்த பொருட்கள் அடைத்து
வழங்கப்படுகின்றன.
உபயோகப்படுத்தப்பட்ட போத்தல்களை மறுபயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது சட்டத்தை
மீறும் செயலாகும் என பிரிட்டன் தேவாலயங்களுக்கான சட்ட ஆலோசனை துறை வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரிட்டன் உணவுத் தர நிர்ணய கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது, பழைய போத்தல்களை மீண்டும் பயன்படுத்தும் போது, அந்த போத்தல்களில்
உள்ள ரசாயனம் உணவில் கலக்க வாய்ப்புள்ளது.
இதனை தடுக்கவே இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த விதியை மீறுபவர்களுக்கு
அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது
இரண்டுமே விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
|