Thursday 18 October 2012.By.Rajah.சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ள இலங்கை இராணுவம். இந்திய ராணுவம் வழங்கும் பயிற்சிகள் சூப்பர்” என்று சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது இலங்கை இராணுவம். இந்தியாவின் பல பகுதிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்தபோது, இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் நாட்டில் எமக்கு பயிற்சி கொடுக்கப்படுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்காக, எமக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்தில் இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. நவீன பயிற்சி முறைகளுடன் கூடிய இந்தப் பயிற்சி, எமது இராணுவ நிபுணத்துவத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உதவுகிறது.
இந்தியா வழங்கும் அதி உன்னத பயிற்சி காரணமாக, இந்த ஆண்டுமுதல் இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு இந்திய மத்திய அரசிடம் இருந்து எமக்கு ஒப்புதல் கடிதம் கிடைத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கும், இந்த ஒத்துழைப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது” என்றும் கூறியுள்ளார்