Thursday 18 October 2012 By.Rajah.
பதிலளிக்க தயார்! மகிந்த சமரசிங்க வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐநா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.
வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
30 அரசசார்பற்ற நிறுவனங்கள், இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆகியன தயாரித்த அறிக்கைகளே இவையாகும்.
இந்த நான்கு அறிக்கைகளும் ஜெனிவா கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒரு அறிக்கையாகத் தயாரிக்கப்படும்.
இந்தப் பணியை இந்திய, பெனின், ஸ்பெய்ன் நாட்டுப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே வரும் 1ம் நாள் பூகோள கால மீளாய்வுக் கூட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க இலங்கை தயாராக உள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு இதற்காக ஜெனிவா செல்லவுள்ளது.