| Thursday, 18 October 2012.By.Rajah. |
| கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்தன. |
|
இத்தகவலை அப்பட வட்டாரங்களே தெரிவித்திருந்தன. இது பற்றி அறிந்து கொதித்து
போயிருக்கிறார் வித்யாபாலன். அப்போதே அந்த படங்களில் நான் நடிக்கவில்லை என மறுத்தேன். இப்போது இன்னொரு படம்(கரண் படம்) பற்றி சொல்கிறார்கள். தமிழில் எந்த படத்திலும் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை. இப்போதைக்கு இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன். வேறு மொழிகளில் கவனம் செலுத்த நேரமில்லை. தமிழ் உள்பட எந்த மொழியிலும் நான் நடிப்பேன். ஆனால் நல்ல கதை அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம் என்று தெரிவித்துள்ளார் |
வியாழன், 18 அக்டோபர், 2012
தமிழ் படங்களில் நடிக்கிறேனா? வித்யாபாலன் கோபம்
வியாழன், அக்டோபர் 18, 2012
செய்திகள்








