Thursday 18 October 2012 By.Rajaj.முற்படும் இலங்கையர்களுக்கு பத்து வருட சிறை! போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் இலங்கையர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் பத்து வருட காலத்துக்கு பிரித்தானியாவுக்கு பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி தடைவிதிக்கப்படும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நெற்று (17) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நேர்மையான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழையும் மாணவர்கள் தொழில் பெறுவோர், பயணிகள் ஆகியோரைத் தமது நாடு மிக நேர்மையான முறையில் வரவேற்கிறது. எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகராலயம், போலியான விபரங்கள் கொண்ட ஆவணங்களுடன் தமது நாட்டுக்குள் பிரவேசிக்கும் எவரையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டாது என்றும் கூறியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவுக்கான விசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு ஆலோசகரையும் தாம் இலங்கையில் நியமிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.