17.11.2012.By.Rajah.தற்சமயம்யாழ்ப்பணத்தில்உள்ள இலங்கையின்ஆறுமாகாணசபைகளின்ஆளுநர்கள் நெடுந்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
வடமேற்குமாகாணசபைஆளுநர்திஸ்சபலல,கிழக்கு மாகாணசபைஆளுநர்மெகான்விஜயவிக்கிரம,தெற்கு மாகாணசபை ஆளுநர் குமாரி பாலசூரிய,மத்திய மாகாணசபை ஆளுநர் திகிறி கொப்பேகடுவ, ஊவா மாகாணசபை ஆளுநர் நந்த மத்தியு, வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்னே டியூகனி ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் உலங்கு வானூர்தி மூலம் நெடுந்தீவுக்கு வருகைதந்தனர்.
அங்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் வரவேற்றனர்.
நெடுந்தீவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டதுடன் நெடுந்தீவின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்
0 comments:
கருத்துரையிடுக