siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 17 நவம்பர், 2012

தடுமாற வைக்கும் உணவுகள் சில - உணவுகளை சாப்பிடாதீங்க! ?

       
17.11.2012.By.Rajah.தம்பதியரைதாம்பத்யத்தில்தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டேன் அப்பஇருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில்சிலஉணவுகளைதவிர்க்கவேண்டும்என்கின்றனர் நிபுணர்கள்.அவர்கள்பட்டியலிட்டுள்ளஉணவுகளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை உணவுகள்
 
வெள்ளை நிறங்களை உடைய கார்போஹைடிரேட் உணவுகள் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை. இதில் வெறும் மாவுச்சத்துதான் இருக்கும். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பர்க்கர், கார்ன்ப்ளேக்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்துவிடுங்கள் ஏனெனில் இது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துமாம்.
 
வறுத்த உணவுகளை வேண்டாமே
 
வறுத்த, பொறித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்பேட் கொழுப்புகள் தாம்பத்யத்திற்கு ஏற்றதல்ல. இது கொழுப்பை அதிகரிக்கும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரன் ஹார்மோனின் அளவை குறைக்கும். அதேபோல் மால்களில் விற்பனை செய்யப்படும் பாக்கெட், டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரெடிமேட் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
 
அதிக புரதம் ஆபத்து
 
சோயாவில் உயர்தர அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளன. அதேபோல் சோயா பாலில் உள்ள சில அமிலங்களும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகின்றன. பாலுக்கு பதிலாக சிலர் சோயா பாலை சாப்பிடுவார்கள் இது செக்ஸ் ஆர்வத்தை கட்டுப்படுத்துமாம்.
 
ஆக்ஸாலிக் அமிலம்
 
கீரைகளில் காணப்படும் ஆக்ஸாலிக் அமிலம் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் அளவை குறைப்பதோடு விந்தணுவின் உற்பத்தியையும் கட்டுப்ப்படுத்துகிறதாம். கீரை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் புதிதாய் திருமணமான தம்பதிகள் தினசரி கீரையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
 
புதினாவிற்கு தடா
 
புதினாவில் உள்ள ஒருவித ரசாயணம் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துகிறதாம். இதனால்தான் துறவு பூண்டவர்கள் புதினாவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டிருப்பார்கள். நமது இந்திய உணவில் புதினாவை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். புதினா சட்னி, புதினா பச்சடி, புதினா ஜூஸ் போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரன் அளவை கட்டுப்படுத்துகிறதாம். எனவே உணவில் அதிகம் புதினா சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

0 comments:

கருத்துரையிடுக