பாகிஸ்தானில் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்புபடி, 30 வயது மதிக்கத்தக்க நபரொருவர்
உயிருடன் எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சினியோட் என்ற நகரில் வசிப்பவர் முகமது சிக்கந்தர்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, சினியோட் கிராம பஞ்சாயத்தார் விசாரணை நடத்தினர்.
05.11.2012.By.Rajah.பின்னர் முகமதுவை உயிருடன் எரித்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதன்படி, முகமது மீது கெரசின் ஊற்றி தீ வைத்தனர்.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முகமதுவின் குடும்பத்தினர் கூறுகையில், ஒரு வீட்டில் திருடும் போது முகமதுவை பிடித்ததாக குற்றம் சாட்டினர். அப்படியே இருந்தாலும் அவரை பொலிசிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் பஞ்சாயத்தார் தண்டனை வழங்க முடிவு செய்தனர். உயிருடன் எரித்து கொன்று விட்டனர் என்று கண்ணீருடன் கூறினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பொலிஸ், திருட்டு போன்ற குற்றங்கள் தொடர்பாக பஞ்சாயத்தார் விசாரிப்பதில்லை. எனினும் முகமது தானாகவே உடலுக்கு தீ வைத்து கொண்டாரா அல்லது வேறு யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

0 comments:
கருத்துரையிடுக