05 11 2012.By.Rajah..அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலால் அங்குள்ள மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. நியூயார்க் நகரமும் ‘சான்டி'யின் தாண்டவத்திற்குத் தப்பவில்லை. ஆனால் இந்த புயலினால் சில நல்ல காரியங்களும் நடந்துள்ளதாம். அந்த நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.
சான்டி புயல் கடந்த திங்கட்கிழமை கரையை கடந்தது. இந்த புயலுக்கு 41 பேர் நியூயார்க் நகரில் கொல்லப்பட்டனர். புயலினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் கொலை 86 சதவிகிதம் குறைந்து போனது. கொள்ளை 30 சதவிகிதம் குறைந்து போனது. கார் திருட்டு 24 சதவிகிதம் குறைந்து போனதாம்.
கடந்த ஆண்டு இதே வாரத்தில் 1,541 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அது இந்த ஆண்டு 1,061 ஆக குறைந்து போயுள்ளதாக புள்ளிவிபவரம் தெரிவிக்கிறது.
கியாஸ் ஸ்டேசனிலும், பெட்ரோலுக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதனை திருடத்தான் அதிக அளவில் முயற்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை மட்டும் கேஸ் நிறுவனங்களில் திருட முயன்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் சான்டி புயலால் குற்றங்கள் குறைந்திருப்பது நல்ல விசயம்தான் என்கின்றனர் நியூயார்க் நகரவாசிகள்

0 comments:
கருத்துரையிடுக