உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உடற்பயிற்சி யால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டின் கார்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட் டில் கூறியிருப்பதாவது:
உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு ஆகியவை ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமைக்கும். நோய் தாக்குதல் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இத்தகைய பழக்கங்களை மேற்கொள்வது நோயின் தீவிரத்தை குறைக்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உரிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக செய்வதால் ஆஸ்துமா தீவிரத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
பொதுவாக ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உடற்பயிற்சி செய்ய தயங்குவார்கள். மூச்சு விடுவதில் சிரமம் உள்ள இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மூச்சு திணறல் அதிகரிக்கும் என்று நினைப்பதே இதற்கு காரணம்.
ஆனால், அது உண்மையில்லை. டாக்டர்களின் ஆலோசனைப்படி, சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தாத உடற்பயிற்சிகளை அவர்கள் செய்யலாம்.
இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் போகப்போக பழகி விடும். அப்போது ஆஸ்துமாவின் தீவிரம் குறையத் தொடங்குவதை அவர்கள் உணரலாம். உடலுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால், உடல் பருமன் போன்ற பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்
0 comments:
கருத்துரையிடுக