siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 5 ஜனவரி, 2013

ஆடுகளத்தை விட்டு வெளியெறும் திட்டமில்லை: சிங்கப்பூரில் பெட்ரர் பேட்டி

ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ஃபெட்ரர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் விளையாடப்போகும் வழியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இன்னும் பல வெற்றிக் கோப்பைகளைப் பெற ஆவலாக இருக்கிறேன். நீண்டகாலம் விளையாட வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். இப்போது என்னை எதிர்த் விளையாடும் இளைஞர்களைக் கண்டு நான் வியக்கிறேன் என்றார்.

17 கிராண்ட் ஸ்லாம் போட்களில் வெற்றிவாகை சூடி உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் "என்னால் முடிந்தவரை அதிககாலம் ஆடுகளத்தில் தாக்குப் பிடிப்பதையே விரும்புகிறேன்".

நான் அதிக வருடங்கள் டென்னிஸ் விளையாடக் காரணமே நான் அந்த விளையாட்டை விரும்புவதுதான். இத்தனை ஆண்டுகாலம் இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் மங்கி மறைந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள். டென்னிஸ் உலகை விட்டு நான் மறைந்து போக எனக்கு 80,90 வயது ஆகிவிடவில்லை.

லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் 2008ல் பீஜிங்கில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் தங்கப்பதக்கமும் பெற்ற ஃபெடரர், அடுத்துவருடம் 2016ல் ரியொவில் நடக்கும் போட்டிகளில் விளையாடுவார். அப்போது அவருக்கு 35 வயதாகிவிடும்.

இந்த வயதில் டென்னிஸ் வீரர்கள் ஓய்வை விரும்பி ஆடுகளத்தை விட்டு வெளியேறுவதுதான் வழக்கம், ஆனால் ஃபெடரர் புதிது புதிதாக வரும் இளைஞர்களுடன் களத்தில் மோதவே ஆசைப்படுகிறார்.

எனக்கு வயதாகி விட்டதாக நான் கருதவில்லை. இளமையாகவே உணர்கிறேன். டென்னிஸ் கடைசிவரை என்கூட வராது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் சிறப்பான முறையில் டென்னிஸ் ஆடுவதையே விரும்புகிறேன் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக