சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு
தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக
பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பிரெஞ்சு காவல் துறை, ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்த
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ஈராக் பொறியாளரை கொலை செய்தவனும் சுவிஸில் சில
தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு
கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கின்றனர். சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாநிலத்திற்கு அருகில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான ஹாட்- சேவோய் கிராமத்தின் பொலிசார், அல்- ஹில்லி குடும்பத்தாரின் கொலை விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொண்டனர். கொலை வெறியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மிகப் பழமையானதாகும். குறிப்பாக அது வரலாற்ற பழமை வாய்ந்த இராணுவ துப்பாக்கி என கூறப்படுகிறது. இது தவிர இன்னொரு துப்பாக்கியும் இவனிடம் இருந்ததாகவும் இவை எப்படி இவனுக்கு கிடைத்தது என பொலிசார் விசாரிக்கின்றனர். 2005ம் ஆண்டில் இவன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவனிடமிருந்த துப்பாக்கி பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது |
சனி, 5 ஜனவரி, 2013
கொலைவெறியனே பிரிட்டிஷ்- ஈராக்கியர் கொலைக்கும்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக