siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 31 ஜூலை, 2015

அதிகரித்து வருகின்றது இந்து கோயில்கள்????

அமெரிக்காவில் இந்து கோயில்கள் அதிகரித்து வருகின்றது என்று நாம் பெறுமைப்பட வேண்டாம், உலகிலேயே 160 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இந்து ஆலயம் அமெரிக்காவில் கட்டப்பட்டு வருவதாக அறிகின்றோம். எமது இந்து மதம் உலகின் அத்தனை மதங்களுக்கும் தாய் மதமாகும். அமெரிக்கர்களின் ஒரே குனம் உலகில் எது சிறந்ததோ அதை தாங்கள் உரிமை கொண்டாடுவதாகும். காலப்போக்கில் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இந்து மதம் வெள்ளையர்களின் மதமாக கூட மாறலாம். ஆகவே நாம் எங்கு சென்றாலும்...

வியாழன், 30 ஜூலை, 2015

ஆபாசபடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கனடா ரொறன்ரோவில் குழந்தைகள் ஆபாசபடங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எரிக் பெர்க்மானின் என்ற 54 வயதுடைய குறித்த நபர் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கைதின் போது அவரது வீட்டில் அவ்வாறான  புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையத்தளம் ஊடான செயற்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை...

சிதைவுகள், மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகளா

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது...

கணவரால் கொலை மனைவி சடலம் தலையில்லாமல் ஆற்றில்கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டது. தற்போது பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று கரோனர்ஸ் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. கணவன் – மனைவி இடையே நடைபெற்ற சண்டையின்போது, ஜாஸ்விந்தர் கவுரின் தலையில் கட்டிங் பிளேடை...

பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகள் மரணம்.

கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடிவந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன் தனது 22 வயதில் நேற்று மரணம் அடைந்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஜோர்ஜியாவில் உள்ள தனது வீட்டு குளியல் அறை உள்ள குளியல் தொட்டியில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும்  ஏற்படவில்லை....

செவ்வாய், 28 ஜூலை, 2015

திருமண வீட்டில் துப்பாக்கி சூடு; 21 பேர் பலி 10 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். மதத்தலைவர் மகன் திருமணம் ஆப்கானிஸ்தானில் பக்லான் மாகாணம் தலீபான் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும். இங்கு அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடப்பதுபோல் முன்விரோதம் காரணமாக மோதல்கள் நடைபெறுவதும் உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் தீவிரவாதிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தங்களது விரோதிகள் மீது தாக்குதல் நடத்துவதும் வழக்கம். இந்த நிலையில்,...

திங்கள், 27 ஜூலை, 2015

சிறையை உடைத்து, பயங்கர கைதிகள் தப்பி ஓட்டம்.

கரீபியன் கடல் நாடான டிரினிடாட்-டொபாகோவின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின். அங்குள்ள சிறையில் பல்வேறு கிரிமினல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கடந்த 24-ந் தேதி அதிபயங்கர குற்றவாளிகள் 3 பேர் சிறையை உடைத்து, சிறைக்காவலர்களை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு சிறை காவலர் உயிரிழந்தார். சிறை காவலர்கள்  திருப்பி சுட்டதில் தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து  உயிரிழந்தார். 2 பேர் தப்பி விட்டனர்.அவர்கள்...

ஞாயிறு, 26 ஜூலை, 2015

55 பேர் பலிஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல்!

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், சவுதிக்கு அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டார். ஏமனில் மீண்டும் அவரது ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சவுதி கூட்டுப்படைகள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான்,  மொராக்கோ, எகிப்து, சூடான் அடங்கியவை), ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில்,...

சனி, 25 ஜூலை, 2015

கள்ளத்தனமாக செல்லும் அகதிகளின் மரணம் அதிகரிப்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கள்ளத்தனமாக செல்லும் அகதிகள் தொடர்ந்து மரணமடைந்து வருவதையடுத்து பிரான்ஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.  பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு கலைஸ் பகுதி வழியாக பல அகதிகள் கள்ளத்தனமாக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் பலர் இந்த முயற்சியின் போது மரணமடைகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியானார். மேலும் ஆண் ஒருவர் ரயிலின் கூரையில் இறந்துகிடந்தார். இது...

வியாழன், 23 ஜூலை, 2015

ஆண், பெண் திருமணம் செய்ய புதிய வயது வரம்பை நிர்ணயம் செய்தது அரசு

ஸ்பெயின் நாட்டில் ஆண், பெண் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வயதை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக உயர்த்திய புதிய சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.  ஐரோப்பிய நாடுகளிலேயே 14 வயதில் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வழக்கம் ஸ்பெயின் நாட்டில் மட்டுமே பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆண், பெண் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யும் வயது 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் திருமண...

ஞாயிறு, 19 ஜூலை, 2015

தனயனை இழந்து தவிக்கும் தம்பியின் உருக்கமான வேண்டுகோள்!

அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள கிரேஸ்ரன் என்னும் நகரத்தில் வசித்து வந்த அஜந்தன் நவரட்ணம் என்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை தொடர்பாக அவருடைய தம்பியார் அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ளதாவது, படுக்கை அறையை சூடாக்கி கொள்ளும் பொருட்டு இறைச்சி வாட்டும் [B,B,Q] என அழைக்கப்படும் இயந்திரத்தின் கரி வில்லைகள் [charcoal tablets] அறையினுள் வைத்து விட்டு உறங்கப் போன அவர் அடுத்த...

சனி, 18 ஜூலை, 2015

இயற்கையின் கோரத்தாண்டவம்.20 கார்கள் தீக்கிரையான!.

அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால்  வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள்  தீயில் எரிந்து சாம்பலாயின, இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

செவ்வாய், 14 ஜூலை, 2015

சூழலுக்கு மாக இயங்கும் கார்களால் ஆபத்தா?

கூகுள் நிறுவனம் உட்பட மேலும் சில கார் வடிவமைப்பு நிறுவனங்கள் ஓட்டுநர் இன்றி இயங்கக்கூடிய கார்களை வடிவமைத்துள்ளன. இக்கார்கள் தற்போது பரிசோதிப்பில் உள்ள நிலையில் இவற்றினால் சூழலுக்கான பாதிப்பு 90 சதவீதம் இல்லை என ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வினை அமெரிக்காவிலுள்ள Berkeley Lab நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் 2030 ஆண்டளவில் பாவைனைக்கு வரும் முற்று முழுதாக இலத்திரனியில் தொழில்நுட்பத்தினைக் கொண்ட தானியங்கிக் கார்கள்...

ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஐஎஸ் தீவிரவாத தலைவர் விமானத் தாக்குதலில் பலி!

அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தான்,  பாகிஸ்தான் மற்றும் அவற்றை  ஒட்டியுள்ள பகுதிகளில் பேராதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் இன்று நன்கார்கர் மாகாணத்தில் உள்ள அச்சின் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய  தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை அறிவித்துள்ளது ...

சனி, 11 ஜூலை, 2015

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பிற்கு தடை ???

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பிற்கு விரைவில் இங்கிலாந்தில் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து  வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பயங்கரவாதம் பரவாமல்...