சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது.
சமுதாயத்துக்கு பயனுள்ள நல்ல விடயமாக இருக்கிற ஒவொவொன்றுக்குமே வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அங்குள்ள கலாச்சார அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட பண்டிகைகள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பது சிறப்புடையதுதான்.
அதேவேளையில், உலகத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு சமுதாயம் தன்னை தனித்துவத்துடன் அடையாளம் காட்டிக்கொள்கிறது. அது உலக ஒருங்கிணைப்பில் விலகி நிற்பது போன்றதுதான்.
அதனால், ஐ.நா. போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் சில தினங்களை ஏற்படுத்தி உலகில் உள்ள எல்லா நாட்டினராலும் இனத்தவராலும் கொண்டாடும்படியான ஒரு சூழலை, ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளன.
அதுவும் இந்த நுற்றாண்டில்தான் தினங்கள் கொண்டாடுவதை ஊடகங்களும் வாணிபமும் உற்சாகப்படுத்தி வருகின்றன.
நண்பர்கள் தினம் முதன்முதலாக, தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள பாரகுவே மக்களிடம்தான் பிரபலமானது. இதை இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்குள் கொண்டாடி வந்தனர்.
இந்தியா, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நாளில் கார்டுகள், மலர்க்கொத்துகள் கொடுத்து வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
காதலர் தினம், மகளிர் தினம், யோகாதினம் போல, நண்பர்கள் தினமும் ஐ.நா. வால் அறிவிக்கப்பட்டது.1958 ஆம் ஆண்டுதான். ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிது.
இதை கொண்டாடுகிறார்களோ இல்லையோ கொண்டாடுகிற உரிமை எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது.
காதலர் தினம், யோகா தினம் போன்றவைகளுக்கு கூட சில நாடுகளில் மதம், கலாச்சாரத்தை காரணம் காட்டி எதிர்ப்பாளர்கள் உருவாகின்றனர்.
நண்பர்கள் தினத்துக்கு எந்த பிரிவினரிடமும் எதிர்ப்பு எழ
வாய்ப்பே இல்லை.
காதல், மனிதர்களுக்கு இரண்டாவது உயிர் என்றால், அந்த காதலோடு சமமாக போட்டியிட்டு வருவது நட்பு. அது மட்டுமல்ல, சமயங்களில் காதலையே வெல்லக் கூடியதாகவும் உள்ளது நட்பு.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் நட்புக்கு ஒரு அதிகாரத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒதுக்கியுள்ளபோது. 365 நாட்களில் ஒரு நாளை நண்பர்கள் தினத்துக்கு ஒதுக்கியிருப்பது கூட நாம் அதற்கு அளித்திருக்கும் சிறிய அங்கீகாரம்தான்.
இந்நாளில், நட்பை வளர்ப்பதற்கும், உறவுக்கு சமமான அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபடலாம்.
இளமையில் நண்பர்கள் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும், முதுமையில் அதை சுருக்கிக்கொள்வதையே சராசரி மனிதர்களின் மனநிலை நிம்மதியாக கருதுகிறது.
இதை மாற்றுகிற கடமை இந்த நண்பர்கள் தினத்துக்குதான் உண்டு.
காதல்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டுவர முடிந்தது என்று எல்லோரும் எண்ணுகிறோம். அதை அதனினும் அனுகூலமாக செய்யும் வலிமை நட்புக்கும் உண்டு.
ரத்த பாத்தியதை உள்ள உறவுகள் துன்பத்தில் உதவுவது. ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதல்ல. ரத்த சம்பந்தம் இல்லாத நண்பர்கள் உதவுவதுதான் மெய்சிலிர்க்க வைப்பதும் மெச்ச தகுந்ததுமாகும்.
அத்தகைய மாண்புமிக்க நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர்களுக்கு உயர்வான உதவிகளை செய்யுங்கள்.
அல்லது, உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு இந்த நன்னாளில் நன்றியை நினைவு கூருங்கள்.