siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 21 ஜூலை, 2012

மேல் கொத்மலை நீர் தேக்கதினுள் வேன் விழுந்து விபத்து (பட இணைப்பு

21.07.2012.ஹொலிரூட் பகுதியில் மேல் கொத்மலை நீர் தேக்க திட்டத்திற்குள் வேன் ஒன்று இன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து ஹொலிரூட் நோக்கி பயணித்த மோட்டார் வண்டியும் ஹொலிரூட்டில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த வேன் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியதில் வேன் வண்டி சுமார் 150 அடி பள்ளத்தில் நீர் தேக்கத்தினுல் வீழ்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த வேன் சாரதியும் மோட்டார் வண்டி ஓட்டுனரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் பின்னர் வேன் வண்டி நீர் தேக்கத்தினுள் கிடக்க மோட்டார் வண்டி பாதையில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் நினைவாக இதய வடிவில் மலர் தோட்டம் அமைத்த முதியவர்

21.07.2012
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக பேரரசர் ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மகால் அமைத்தார். இது இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆனால் இது போன்ற பிரமாண்ட சாதனையை சாதாரண மனிதர்களால் உருவாக்க இயலாது. இருந்தபோதிலும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வின்ஸ்டன் ஹோவிஸ் (வயது 70) என்ற விவசாயி தனது மனைவி ஜேனட் நினைவாக இருதயம் வடிவில் மலர் தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
இதற்காக 6 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் நறுமணம் வீசும் வெள்ளைநிற பூச்செடிகளை வளர்த்து வருகிறார். 70 வயதிலும் மனம் தளராமல் வின்ஸ்டன் இந்த பணியை அவரே செய்து வருகிறார்.








வெள்ளி, 20 ஜூலை, 2012

எளிமையான புக்மார்கிங் சேவையை வழங்கும் இணையம்

20.07.2012
இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.இதற்கு காரணம் நல்ல தளங்களும், பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால்.
அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான்.
எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைப்படவே செய்கின்றன. அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.
டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் சேவைகளிலேயே மிகவும் எளிமையானது என்று இதனை சொல்லலாம். இதன் வடிவமைப்பும் தோற்றமும் கூட எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது.
இதன் மூலம் இணையதளங்களை புக்மார்க் செய்வது மிகவும் சுலபமானது. எந்த தளத்து குறித்து வைக்க நினைக்கிறோமோ அந்த தளத்தில் புக்மார்கிங் டூல் பாரை கிளிக் செய்தால் போதும், அந்த தளத்தின் இணைப்பை மின்னஞ்சல் முகவரிக்கு இந்த தளம் அனுப்பி வைத்துவிடும்.
அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது மின்னஞ்சல் பெட்டியை திறந்து இந்த இணையத்தளத்தை பார்த்து கொள்ளலாம். மின்னஞ்சலில் இருந்து கணணியில் தரவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாமலும் கூட இணையதளத்தை பார்க்கலாம்.
பயனுள்ள தளங்களை மறக்க கூடாது என புக்மார்க் செய்து விட்டு அதன் பிறகு புக்மார்க் செய்ததையே மறந்து நிற்பதை காட்டிலும், புக்மார்க் செய்த தளங்கள் நேரடியாக மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து சேர்வது பயனுள்ளது தானே

பிறந்த நாள்வாழ்த்துக்கள்

  20.07.07.2012இன்று பிறந்த நாளைகொண்டாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு அன்பு கனிந்த பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி நவட்கிரி இணையமும் தேவன் ராஜா குடும்பமும் வாழ்த்துகின்றனர்

சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

July 20, 20120
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இன்று காலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரூபா இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் சவூதி அரேபியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்

யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு

யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு

July 20, 20120
யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு
யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கால்நடைத்திணைக்களத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட காளை மாட்டை கொள்வனவு செய்த வியாபாரி அதனை இறைச்சிக்காக வெட்ட விளம்பரம் செய்த நிலையில் நீதிமன்றத்தை நாடி காளை மாடு வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது

சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது

சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது.

July 20, 20120
சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது.
சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்
கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் சுவிசிலுள்ள யேர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிப் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்திருப்பதாகவும் அதனை பிள்ளைகள் கதவின் துவாரம் வழியாகப் பார்த்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவைச் சேர்ந்த கணவனை பாசலில்(Basel) வைத்துக் கைது செய்துள்ள யெனீவா காவல்துறையினர் சாம் டொலோன் (Champ-Dollon) சிறையில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மற்றொரு தமிழரை சுவிச்சர்லாந்து காவல்துறையினர் தேடி வருவதுடன் குறித்த நபர் கொலைக்கு அல்லது கொலையின் பின்னர் உடலத்தை ஆற்றில் வீசுவதற்கு உதவி செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது

சவூதி பெண்களுக்கு சிகை அங்காரம் செய்த அழகுக்கலை நிபுணர்

20.07.2012 சவூதி அரேபியாவிலுள்ள பெண்களின் வீடுகளுக்கு இரகசியமாக விஜயம் செய்து அவர்களுக்கு கேச அலங்காரம் மற்றும் ஒப்பனை அலங்காரம் என்பவற்றை மேற்கொண்ட அழகுக்கலை நிபுணர் ஒருவருக்கு 200 கசையடிகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பச்சை குத்தும் நிபுணர் என பிரபலம் பெற்ற மேற்படி லெபனானிய நபருக்கு பெண்களுக்கு பச்சை குத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட சிறைத் தண்டனையும் ஜெடாஹ் மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெடாஹ் நகரின் அல் ரவ்டாஹ் மாவட்டத்தில் இரகசிய அழகு சிகிச்சைகளை மேற்கொண்ட வேளை மேற்படி நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சவூதி அரேபியாவில் ஒருவருக்கொருவர் திருமண பந்தத்தை கொண்டிராத ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு சவூதி அரேபியாவில் தடை உள்ளது.

பெண்களுக்கான தலைக்கு பூசும் வர்ண சாயங்களுடனும் கத்திரிக்கோல்களுடனும் பிடிப்பட மேற்படி நபர் மேற்படி உபகரணங்கள் லெபனானிலுள்ள தனது அழகு நிலையத்தில் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் வாதிட்டுள்ளார்.

எனினும் அவரது கையடக்க தொலைபேசியில் பெண் வாடிக்கையாளர்களது எழுத்து வடிவ செய்திகளை ஆதாரமாக வைத்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், வாடிக்கையாளரின் கார் சாரதி போன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அனுப்பியே அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்

பவுச்சர் கண்; பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு

20.07.2012
காயமடைந்துள்ள தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர், தனது இடது கண்ணில் பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தின் போது இம்ரான் கான் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் பறந்து விக்கெட் காப்பாளர் பவுச்சரின் கண்ணில் தாக்கியது.

அதன் பின்னர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதோடு, இறுதித்தொடராக அமையவிருந்த இங்கிலாந்துத் தொடருக்கு முன்னதாகவே மார்க் பௌச்சர் தனது ஓய்வினை அறிவித்தார்.

தற்போது அவருக்குச் சிகிச்சையளித்துவரும் மருத்துவர் சுவைப் மஞ்ரா கூறுகையில், பவுச்சரின் கண் விழித்திரையில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. எனவே, முழுமையான பார்வையிழப்பு அவருக்கு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால் 100 சதவீதம் உறுதியாகக் கூற முடியாது என்றும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்