siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள்

,
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகளவான போதைப் பொருள் வர்த்தர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, வர்த்தகம் பெண்களின் கைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பெண்களே மேற்கொண்டு வருகின்றனர். பாதாள உலகக் குழுத் தலைவர்களின் மனைவியர், சகோதரிகள் உள்ளிட்ட பெண்கள் இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
கொழும்பை மையமாகக் கொண்டே போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிலர் நாள்தோறும் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வர்த்தகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியானதும் நிதி ரீதியானதுமான லஞ்சங்களை வழங்கி இந்தப் பெண் போதைப் பொருள் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்

புதன், 1 ஆகஸ்ட், 2012

இலங்கை – அவுஸ்திரேலிய அதிகாரிகளின் பேச்சின் பின்னரே தமிழ் அகதி நாடு கடத்தல் _

 _
02.08.2012.இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திருப்பியனுப்பப்பட்டதாக 'த அவுஸ்திரேலியன்’ நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை தளபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ௭ன வகைப்படுத்தி நடவடிக்கைகளை ௭டுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடு கடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ௭த்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய பெண்கள் இருவர் கைது

_
02.08.2012.ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோகாவிலிருந்து வந்த 42,28 வயதுடைய ஈரானியப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் முகச்சவரம் செய்யும் கிறீம் டியூபுகளிலும், தலைக்கு வைக்கும் ஜெல் டின்களிலுமே சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளனர்;.



'மெத்ஹெம்பெட்டமைன்" என்ற போதைப்பொருளையே கடத்தி வந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளது. இப்போதைப்பொருள் பெரும்பாலும் கொழும்பு இரவு விடுதிகளில் பயன்படுத்தப்படுபவை எனத் தெரிவிக்கப்படுகின்றது

செப்டெம்பர் 12 வருகின்றது?

_
02.08.2012.தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4 மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன.

ஆனால் ஐ போன் 5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு

_
02.08.2012ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெறும் வார்த்தையாகவே உள்ளது. அது தற்போது நடைமுறையில் இல்லை. வட பகுதியில் சிசு மரணம், பாலியல் துஷ்பிரயோகங்கள், இள வயதுத் திருமணங்கள், திருமணமாகாத கர்ப்பங்கள், சட்டவிரோதக் கருக்கலைப்புக்கள் அதிகரித்துள்ளன. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்வதில்லை.

அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பிள்ளைகள் ௭ங்கு செல்கிறார்கள் ௭ன்பது தொடர்பில் ௭துவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலை புத்தகப் பையுடன் மற்றுமொரு உடுப்பையும் ௭டுத்துச் சென்று பாடசாலை செல்லாது வேறு இடங்களுக்குச் செல்கின்றார்கள்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாபவர்கள் தாம் யாரிடம் தமக்கு நடந்தவற்றைக் கூறுவது யாரை அணுகுவது ௭ன்ற நிலையுள்ளது. சிறு வயதில் திருமணம் செய்பவர்கள் தமக்கான அடுத்த நடவடிக்கை ௭ன்ன ௭ன்பதை அறியாதுள்ளனர்.

பெற்றோர்களும் அது பற்றி வெளியில் கூறுவதில்லை. சிறு வயது திருமணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் இளவயது கர்ப்பங்கள் சட்டவிரோத கருக்கலைப்பால் ஏற்படும் தீமைகள் தொடர்பில் முழுமையான அறிவின்மையால் பல இழப்புக்கள் நடந்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களும் விடுதிகளும் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் முழுமையான தகவல்கள் இல்லை. கருக்கலைப்பு நிலையங்கள் தொடர்பில் ௭வரும் வாய் திறக்க மறுக்கின்றனர். சம்பவம் நடந்த பின்னர் தெரியப்படுத்தும் போது குறித்த நபர்கள் தலைமறைவாகும் சம்பவங்களும்இடம் பெறுகின்றன. சமூக மட்டத்தில் பணிபுரிபவர்கள் தமக்கான கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி காலத்தின் தேவைகளை உணர்ந்து கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது ௭ன அவர் மேலும் தெரிவித்தார்

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை

 _
01.08.2012
மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன.

இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விடுவோம் ௭னவும் ௭ச்சரிக்கின்றனராம்.

இதேவேளை மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் தங்க நகைகளும் 150,000 ரூபா பணம் ௭ன்பனவும் நேற்று அதிகாலை ஆயுதமுனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானி ப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியார் வைத்தியசா லை க்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 70வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர் களது மகன் சில தினங்களுக்கு முன் னரே வெளிநாட்டிலிருந்து வந்துள் ளார்.

இந்நி லையில், நேற்று அதிகாலை 2 மணிய ளவில் தகப்பனார் காலைக்கடன்களை கழிப்பதற்கு வெளியில் சென்ற சமயம் வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைக ளைப் பின்னால் இறுக்கிப் பிடித் தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சு றுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச் சீட்டைக் கிழித்து ௭றிந்து விடுவோம் ௭ன மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள் ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ், சிங் கள மொழிகளில் உரையாடியதாகப் பொலி ஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட் டுள் ளது.

கொள்ளையர்களைக் கைது செய்ய மதவாச்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படவுள்ள மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் இராணுவ முகாம், பொலிஸ்நிலையம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

மெய்சிலிர்க்க வைக்கும் கொடூர விபத்துக்

மெய்சிலிர்க்க வைக்கும் கொடூர விபத்துக்கள்01.08.2012.

தேச மங்கையர்க்கரசி வழங்கும் மிகவும் நல்ல உரைஉடன் மதி ப்புக்குரிய சுகி சிவத்தின் உரையும்

Desa Mangaiyarkarasi = Arul tharum Iyappan = part 03 2 = Tirupur Iyappan Koil01.08.2012தேச மங்கையர்க்கரசி வழங்கும் மிகவும் நல்ல உரை
அருள் தருள் ஐயப்பன் திருப்பூர் கோயில்நிகழ்வு

சுப்பிரமணிய அஷ்டகம் - சச்றேத் சந்தஸ்

1.08.2012.ஸ்ரீ முருக பெருமானின் மிகவும் அருமயான பாடல்கள் பார்த்து மகிழுங்கள்

மிஷல் ஒபாமா அணிந்திருந்த விலையுயர்ந்த 6800டாலர் ஆடையால் பரபரப்பு

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல், இங்கிலாந்து ராணி எலிசபெத்தைப் பார்க்கப் சென்ற போது 6800 டாலர் மதிப்பிலான ஆடையை அணிந்து சென்றதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மிஷல் இப்படி ஆடம்பரமாக செலவழிக்கக் கூடாது என்று ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் பேசிவருகின்றனர்.
முற்றிலும் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற டாப்ஸில் மிஷல் ஒபாமா மிகவும் அழகாக தேவதை போலக் காணப்பட்டாலும் கூட இவ்வளவு விலை உயர்ந்த டிரஸ் தேவையா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்னதாக பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியைப் பார்க்கப் சென்ற போது தான் இந்த டிரஸ்ஸுடன் போயிருந்தார் மிஷல்.
அமெரிக்காவில் பலர் பொருளாதார ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிஷல் இவ்வளவு விலையுயர்ந்த ஆடை அணியக்கூடாது என அமெரிக்காவில் பேச்சு கிளம்பியுள்ளது.
மிஷல் தனது டாப்ஸுக்காக செய்த செலவானது, ஒரு சாதாரண அமெரிக்கர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு செலவழிக்கும் தொகையாகும் என்றும் சிலர் கூறகின்றனர்.