siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 1 ஆகஸ்ட், 2012

மிஷல் ஒபாமா அணிந்திருந்த விலையுயர்ந்த 6800டாலர் ஆடையால் பரபரப்பு

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல், இங்கிலாந்து ராணி எலிசபெத்தைப் பார்க்கப் சென்ற போது 6800 டாலர் மதிப்பிலான ஆடையை அணிந்து சென்றதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மிஷல் இப்படி ஆடம்பரமாக செலவழிக்கக் கூடாது என்று ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் பேசிவருகின்றனர்.
முற்றிலும் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற டாப்ஸில் மிஷல் ஒபாமா மிகவும் அழகாக தேவதை போலக் காணப்பட்டாலும் கூட இவ்வளவு விலை உயர்ந்த டிரஸ் தேவையா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்னதாக பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியைப் பார்க்கப் சென்ற போது தான் இந்த டிரஸ்ஸுடன் போயிருந்தார் மிஷல்.
அமெரிக்காவில் பலர் பொருளாதார ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிஷல் இவ்வளவு விலையுயர்ந்த ஆடை அணியக்கூடாது என அமெரிக்காவில் பேச்சு கிளம்பியுள்ளது.
மிஷல் தனது டாப்ஸுக்காக செய்த செலவானது, ஒரு சாதாரண அமெரிக்கர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு செலவழிக்கும் தொகையாகும் என்றும் சிலர் கூறகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக