புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, நோர்வே தலைநகர் ஓஸ்லோவில்
உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று
இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதரக ஊழியர்களுக்கு ஏற்பட்டதால்,
உடனே பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தூதரகத்தில் இருந்த அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தூதரகம் அமைந்துள்ள சாலை முக்கிய சுற்றுலா பகுதி என்பதால் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அந்த சாலை முழுவதும் பொலிஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகள், தீயணைப்பு வண்டிகள் தயாரான நிலையில் நின்றிருந்தன. வெடிகுண்டு தோற்றத்தில் இருந்த அந்த பொருளை நிபுணர்கள் ஆராய்ந்தனர். அது உடற்பயிற்சி செய்யும் உருளை என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு பீதி ஒருவழியாக நீங்கி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தூதரகத்தில் இயல்பு நிலை திரும்பியது. |
முகப்பு |
0 comments:
கருத்துரையிடுக