புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,லண்டன் ஒலிம்பிக் நீச்சல்
போட்டியின் பிரெஸ்ட்ஸ்டோர்க் பிரிவில் 15 வயதான லித்வானிய நாட்டு வீராங்கனை தங்கம்
வென்று சாதனை படைத்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் 100 மீற்றர்
பிரெஸ்ட்ஸ்டோர்க் மகளிர் பிரிவு போட்டி நடைபெற்றது.
இதில் லித்வானிய நாட்டு வீராங்கனையான ருட்டா மெலியுட்டி, அமெரிக்க வீராங்கனையான
ரிபெக்கா சோனியை விட 0.08 நொடி முன்னதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்த தங்கப்பதக்கமே லித்வானிய நாடு ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக வந்த சோனி வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாவதாக வந்த ஜப்பானின் சட்டோமி
வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.
தங்கம் வென்ற மெலியுட்டி பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி பயிற்சி எடுத்து
வந்துள்ளார். வெற்றி குறித்து அவர் கூறுகையில், என்னால் இதை நம்பவேமுடியவில்லை
எனக்கு கிடைத்த பெரிய விருதாகும் என்றார்.
|
0 comments:
கருத்துரையிடுக