புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, ஆப்பிரிக்காவின் மேற்கு
பகுதியில் உள்ள நாடான மாலியில், முறைகேடான செயல்களில் ஈடுபடுவோருக்கு தீவிரவாத
இயக்கத்தினர் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
அங்குள்ள அகூயல்ஹோக் என்ற நகரில் இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல்
குழந்தை பெற்று விட்டனர். இதை அறிந்து கொண்ட கிளர்ச்சி பிரிவு தலைவர்கள், காதல் ஜோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஊரின் மத்திய பகுதிக்கு அழைத்து வந்தனர். நான்கு அடி ஆழத்துக்கு இரண்டு பள்ளங்களை தோண்டி இருவரையும் கழுத்து புதையும் அளவுக்கு மண்ணை போட்டு மூடினர். தலை மட்டும் வெளியே தெரியும் படி இருக்க, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கோஷம் போட்டப்படி இந்த ஜோடியை கல்லால் அடித்தனர். இருவரும் துடிதுடித்து இறந்த பிறகு சூழ்ந்திருந்த மக்கள் அமைதியாயினர். இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் தண்டனைக்கு பயந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான அல்ஜீரியாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது |
புதன், 1 ஆகஸ்ட், 2012
கள்ளக்காதல் ஜோடி கல்லால் அடித்து கொலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக