siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 1 ஆகஸ்ட், 2012

குழந்தையை திருடிய பெண்ணுக்கு 25 ஆண்டுகள் கழித்து தண்டனை கிடைத்த வினோதம்

 
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு முன் குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணுக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த ஆன் பெட்வே(வயது 50). அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இல்லாமல் போகவே, குழந்தையை திருடி வளர்க்க திட்டமிட்டார்.
எனவே கடந்த 1987ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹர்லெம் மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஜாய் வொயிட் என்பவரின், பெண் குழந்தையைத் திருடிச் சென்றார் பெட்வே.
திருடிய குழந்தையின் உண்மையான கர்லினா வொயிட் என்ற பெயரை மாற்றி, 25 ஆண்டுகளாக வளர்த்துள்ளார். தற்போது 25 வயதை எட்டிய கர்லினா வொயிட்டுக்கு, பெட்வே தனது தாய் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது.
காணாமல் போன குழந்தைகளை பற்றிய மையத்தை அணுகினார் கர்லினா. அங்கு அவரது டி.என்.ஏ.வை பரிசோதித்த மருத்துவர்கள்,ஜாய் வொயிட் தான் உனது தாய், கார்ல் டைசன் தான் உனது தந்தை எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனது உண்மையான பெற்றோரைக் கண்டுபிடித்து, கடந்தாண்டு அவர்களுடன் சேர்ந்தார் கர்லினா.
குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக 25 ஆண்டுகளுக்குப் பின் பெட்வே கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக