புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, |
லண்டன் ஒலிம்பிக்
போட்டியில் இன்று இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் விபரம்:
வில்வித்தை: மகளிர் தனிநபர் முதல் சுற்று: இந்தியாவின் தீபிகா குமாரி- இங்கிலாந்து வீராங்கனை அமய் ஆலிவருடன் மோதல் பேட்மின்டன்: மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று: சாய்னா நெஹ்வால், நெதர்லாந்து வீராங்கனை ஜியோவுடன் மோதல். ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று. பருப்பள்ளி காஷ்யப், இலங்கையை சேர்ந்த நிலுகா கருணாரத்னேவுடன் மோதல். ஹொக்கி: நெதர்லாந்துடன் கடந்த போட்டியில் தோல்வியுற்ற இந்திய ஹொக்கி அணி, இன்று நியூசிலாந்து ஹொக்கி அணியுடன் மோதல். துடுப்பு படகு: ஆடவர் ஒற்றையர் ஸ்குல்ஸ் (அரையிறுதி சி): 13 முதல் 18வது இடத்துக்கான போட்டியில் ஸ்வரண்சிங் பங்கேற்பு ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் ஸ்குல்ஸ்: (அரை இறுதி “டி”): 19 முதல் 24வது இடத்துக்கு மஞ்சித்சிங்- சந்திப்குமார் பங்கேற்பு. துப்பாக்கி சுடுதல்: மகளிர் 25 மீற்றர் பிஸ்டல்: ரகி சரோனாபாத், அனுராஜ்சிங் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் 2வது சுற்று: லியாண்டர் பயஸ் -விஷ்ணு வர்தன் ஜோடி, பிரான்சை சேர்ந்த டிசோங்கா- மைக்கேல் ஜோடியுடன் மோதல். கலப்பு இரட்டையர் முதல் சுற்று: பயஸ்- சானியா மிர்சா, செர்பியாவை சேர்ந்த ஜிம்மோன்லூக்- இவானோ விக் ஜோடியுடன் மோதல். |
புதன், 1 ஆகஸ்ட், 2012
லண்டன் ஒலிம்பிக்கில் இன்று இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக