siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இத்தனை வண்ணமா ரோஜாவில்....

02.082012.

இத்தனை வண்ணமா ரோஜாவில்..




























விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் ஊசிகள்: விசாரணை தொடக்கம்

 
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,கனடாவின் விக்டோரியாவிலிருந்து டொரண்டோ மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்தில், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் ஊசிகள் இருந்தது குறித்து விசாரணை தொடங்கியது. இது தொடர்பாக அந்த விமானத்திற்கு உணவுப்பண்டம் வழங்கும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் கனடாவின் செய்தித் தொடர்பாளரான பீட்டர் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், தங்கள் நிறுவனம் உணவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், உடனே உணவு வழங்கிய நிறுவனத்திடம் ஊசி குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் ஏர் கனடா காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதே போன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் டெல்ட்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவுகளிலும் ஏராளமான ஊசிகள் இருந்ததால், அமெரிக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் நடைபெற்ற "தமிழ் - மறுக்கப்பட்​ட அடையாளம்" மாநாடு

Photoவியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
"தமிழ்-மறுக்கப்பட்​ட அடையாளம்" எனும் மாநாடு கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி Palazzo delle Aquile – Sala delle Lapidi யில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.
Palermo வில் உள்ள வெளிநாட்டவர்களில் தமிழர் தான் அதிகமாக உள்ளார்கள். 5000க்கு மேல் இங்கு வாழ்கின்றார்கள், ஆனால் குறைவான எண்ணிக்கை இத்தாலி இன மக்களுக்கு தான் இவர்களுடைய சோக நிலவரம் தெரியும்.
இலங்கை தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவ்வினம் பல தசாப்தங்களாக சிங்கள மக்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
Sicilia மாகாண இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் Stefano Edward, தமிழ் மக்கள் இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை செய்து வருகின்ற திட்டங்களை விவரித்தார்.அதைத் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனை உருவாகின ஆரம்பத்தில் இருந்து தற்போதைய மனித உரிமை மீறல்கள் பற்றியும் எடுத்து உரைக்கப்பட்டது.
Sicilia மாகாண இணைப்பாளர் Stefano Edward, இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ,தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்களவை செய்து வருகின்ற வேலைத்திடங்களை விபரித்து எடுத்துரைத்தார்.
அத்தோடு தமிழர்களின் வரலாற்று ரீதியான தகவல்கள் உட்பட இன்றுவரை சிங்களத்தால் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட மனிதவுரிமை மீறல், மானிடத்திற்கு எதிரான வன்முறை மற்றும் இனவழிப்பு விடையமாக ஆழமாக எடுத்து கூறப்பட்டது.
Palermo பல்கலைக்கழக பேராசிரியர் Giuseppe Burgio, இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் போராடி அமைக்கப்பட்ட தமிழீழ நிழல் அரசாங்கம் மற்றும் அவர்களுக்கு இருந்த மக்களின் பேராதரவு தொடர்பாகவும் விளக்கினார்.
Giuseppe Burgio, எமது மனித நேய பணியாளர்களின் வழக்கில் நீதவானின் வேண்டுகோளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஓர் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்து இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் Fulvio Vassallo, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உள்ள தடை தொடர்பாகவும் அதனின் பாதிப்பு தொடர்பாகவும் உரைத்தார். மேலும் உடனடியாக இலங்கை அரசாங்கம் நடாத்திய இனவழிப்பு மற்றும் போர் குற்றம் மீது சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென எடுத்துரைத்தார்.
மனித உரிமை பேராசிரியரான Clelia Bartoli, போர் குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை இவற்றின் விளக்கத்தைத் வலியுறுத்தி தமிழர்களுக்கு நிகழ்ந்தது திட்டமிட்ட இனப்படுகொலை தான் எனக் கூறினார்.
மேலும் ஊடகங்களின் மௌனமும் அரச கட்டமைப்புகளின் பலவீனமும் இவ் இனவழிப்புக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இம் மௌனத்தின் காரணம் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற வல்லரசுகளின் பொருளாதார நோக்கத்திற்கே ஆகும். தனது மௌனத்தால் இவ் இனப்படுகொலைக்கு உறுதுணையாக நின்றமைக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுத்து ஓர் தீர்வினை எடுப்பது சர்வதேசத்தின் தார்மிக கடமையாகும் என இறுதியாக தெரிவித்து இருந்தார்.
தமிழ் மக்கள் தரப்பில் மட்டும் அல்லாமல் இத்தாலிய அறிஞர்கள் போன்றவர்கள் தரப்பில் இருந்தும் தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பு சம்மந்தமாக தகவல்கள் வந்தமையால் தம்மால் இதற்கு முயன்றதை முன்னெடுப்பார்கள் என கல்விக்கான மாநகர அமைச்சர் Barbara Evola கூறி இருந்தார். அவர்கட்கு இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை சார்பாக ஓர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இறுதியில் மக்கள் வளர்ச்சி ஆய்வாளர் Fabio Pettirino, அமைப்புனளுக்கிடையே செய்யக்குடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக உரையாற்றினார். அரசாங்க மத்தியில் இவ்விடயத்தை எப்படி கொண்டு செல்வது மற்றும் எமது வேலைத்திட்டங்களுக்கு அரசாங்க உதவி மற்றும் ஆதரவு பெறுவது தொடர்பாகவும் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து விவாதம் இடம்பெற்றது இதில் CISS அமைப்பின் Sergio Cipolla மற்றும் Amnesty International அமைப்பின் ஆசிரியர் Provenza அவர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
மாநாட்டில் பங்குபெற்றிய அனைவரும் "தனித் தமிழீழமே" தமிழ் மக்களின் ஒரே தீர்வென்ற பிரகடனத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டார்கள்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்புகள் பின்வருமாறு : Comune di Palermo - Human Rights Youth Organisation - Amnesty International - Sportello antirazzista Cobas - Forum antirazzista Palermo – Zetalab - Giuristi Democratici – CISS - Associazione Efata – ASGI – COBAS - S.O.S. Razzismo Sicilia - Giovani Comunisti Palermo - Officina Creativa Interculturale – UNIS - S.E.L. – Arca - Giornale del Mediterraneo – CGIL.

மன்னார் நீதிமன்றம் விவகாரம்: ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி

 
 
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், மன்னார் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மங்கள வாத்தியம் இசைக்கப்படவுள்ளதாகவும் சில ஊடகவியலாளர்களுக்கு கெட்டகாலம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்திகளை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தனர். இதன் நிமித்தம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் தொடர்ந்தும் மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அதன் போது மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களும் நீதிமன்றத்திந்கு சென்றனர்.
இதன் போது மன்னார் நீதிமன்ற பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்த பொலிஸ் அதிகாரி சிறிகாந்தன் என்பவர், அப்பகுதியால் சென்ற மன்னார் ஊடகவியலாளர் ஒருவரை இடை மறித்து கடுமையாக கதைத்து எச்சரித்துள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சிறிகாந்தன் தற்போது அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் பாதுகாப்பு பிரிவு பொலிஸாக தன்னை அடையாளப்படுத்தி மன்னாரில் செயற்பட்டு வருகின்றார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, ஊடகவியலாளரை கடுந்தொனியில் அச்சுறுத்தியதோடு, அமைச்சர் றிஸாட் எவ்வளவோ நல்ல வேலைகளை செய்து வருகின்றார். அதனை ஊடகங்களில் வெளியிடாது அவருக்கு எதிராக செயற்பட்டு வருவதாக கடுமையாக எச்சரித்ததோடு, மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் தொடர்பிலும், கைது செய்யப்பட வேண்டிய 35 பேர் தொடர்பிலும் தொடர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றீர்கள்.இது உங்களுக்கு நல்லதாக இல்லை.
இன்றுடன் (31-07-2012) நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். அதன் பின் மன்னார் ஊடகவியலாளர்கள் பலருக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை நீ பார். நாங்கள் இனி என்ன செய்வோம் என்று தெரியாது. சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க தயாராக இருங்கள் என அச்சுறுத்தியுள்ளார்.
மன்னார் ஊடகவியலாளர்கள் சிலருக்கு வெகு விரைவில் மங்கள வாத்தியம் இசைக்கப்படவுள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி, ஊடகவியலாளரை கடுமையாக அச்சுறுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு தமிழராகவும், மன்னாரைச் சேர்ந்தவராகவும் உள்ளார். கடந்த வன்னி யுத்தத்தின் போது காயமடைந்த பல நூற்றுக்கணக்காணவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்தில் மன்னார் வைத்தியசாலையில் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி சிறிகாந்தன், அங்கிருந்த பலரை சட்டவிரோதமாக வெளியில் விட்டு பணம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி, மன்னார் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தமை தொடர்பில் மன்னார் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக சட்டத்தரணிகளினுடாக வழக்கு ஒன்றை மன்னார் ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்யவுள்ளனர்

யேர்மன் Göttingen நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு

வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் 1983 யூலை 23, தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும் மற்றும் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடுக்கும் இனவழிப்பை உள்ளடக்கியும் யேர்மன் Göttingen நகரில் தமிழ் இளையோர்களால் கவனயீர்ப்பு நடைபெற்றது
இளையோர்கள், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் வழங்கி யேர்மன் மக்களை விழிப்படைய வைத்தார்கள். நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு, ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூர்ந்தனர்.
அதே வேளை, கடந்த 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி, தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.
பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர். கடந்த வாரங்களாக 10 நகரங்களுக்கும் மேலாக யேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் ஒழுங்கு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திம் இருந்து டீசல் இறக்குமதி

வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இலங்கைக்கு கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனமொன்றிடமிருந்து டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வீடோல் என்னும் நிறுவனத்திடமிருந்து இவ்வாறு டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தரம் குறைந்த எரிபொருளை இந்த நிறுவனமே விநியோகம் செய்துள்ளது. இதன் காரணமாக வீடோல் நிறுவனம் கறுப்புப் பட்டியலிடப்பட்டது.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளார்.
தரம் குறைந்த டீசல் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள்

,
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகளவான போதைப் பொருள் வர்த்தர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, வர்த்தகம் பெண்களின் கைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பெண்களே மேற்கொண்டு வருகின்றனர். பாதாள உலகக் குழுத் தலைவர்களின் மனைவியர், சகோதரிகள் உள்ளிட்ட பெண்கள் இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
கொழும்பை மையமாகக் கொண்டே போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிலர் நாள்தோறும் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வர்த்தகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியானதும் நிதி ரீதியானதுமான லஞ்சங்களை வழங்கி இந்தப் பெண் போதைப் பொருள் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்