siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் ஊசிகள்: விசாரணை தொடக்கம்

 
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,கனடாவின் விக்டோரியாவிலிருந்து டொரண்டோ மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்தில், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் ஊசிகள் இருந்தது குறித்து விசாரணை தொடங்கியது. இது தொடர்பாக அந்த விமானத்திற்கு உணவுப்பண்டம் வழங்கும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் கனடாவின் செய்தித் தொடர்பாளரான பீட்டர் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், தங்கள் நிறுவனம் உணவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், உடனே உணவு வழங்கிய நிறுவனத்திடம் ஊசி குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் ஏர் கனடா காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதே போன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் டெல்ட்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவுகளிலும் ஏராளமான ஊசிகள் இருந்ததால், அமெரிக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக