Photo |
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்வதற்காக பிரிட்டிஷ் பராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 11.30 மணியளவில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு உலங்குவானுர்தி மூலம் வந்திறங்கினார்கள்.
யாழ்ப்பாணம் வந்திறங்கிய அவர்களை வரவேற்க அரச அதிகாரிகள் எவரும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு வரவில்லை. பொலிஸாரே சம்பவ இடத்தில் காத்திருந்தனர்.
இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரையில் உலங்குவானுர்தியில் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திருந்தனர். அத்தோடு அவர்களுக்கு பிரயாணம் செய்வதற்கு வாகன வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்திறங்கிய யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மலர் மாலை அணிவித்து அவர்களை வரவேற்று, வாகன ஏற்பாடுகளை மேற்கொண்டு அழைத்துச் சென்றார்.
இவ்வாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகின்ற பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான வரவேற்புக்கள் அளிக்கப்படுகின்றபோதும் பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுவினரை காக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக