siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....

 02.08.2012.ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.

"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.

"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும் படாத கஷ்டமா..." என்று ஆறுதல் கூறினேன்.

"ஆறுதல் சொல்வது சுலபம். அனுபவிப்பவனுக்குத்தானே தெரியும் கஷ்டம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால், பரிதாபமாக பார்த்தார்.

"என்ன தம்பி... பிரச்சினையைச் சொல்லுங்கள். எதற்காக பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்" என்றேன்

" பேய் அடிக்கவில்லை சார்.. என் பெண்டாட்டிதான் தினமும் என்னை அடிக்கிறாள்" சொல்லும் போது அழுதே விட்டார்.

கதை இதுதான். இவருடைய மனைவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். இவர் வசதியான குடும்பம். வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. தன்னையும் அம்மாவையும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார். அதே நேரத்தில் மனைவி மீது உள்ள அன்புக்கும் குறைவில்லை.

மாமியாரும் மருமகளை மகளாகவே நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேசினால் கணவனின் கன்னத்தையே பதம் பார்த்து விடுகிறாள்.

இப்போது இது போன்ற பிரச்சினைகள் பலவீடுகளில் இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். அவருடைய ஜாதகத்தையும் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தேன். இவர் மனுச கணம். அந்தப் பெண் ராட்சஷ கணம். வசியப் பொருத்தம் இல்லை. மேலும் சில பாதிப்புகள் இருந்தது.

அவரிடம் நிலவரத்தைக் கூறி சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி... அவருடைய வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தேன்.

இந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை எப்படியாவது களைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே, சில நாட்கள் கழித்து அவருடைய வீட்டுக்கு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசினேன். என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

முதலில் ஏன்... எதற்கு என்று கேட்டு முரண்டு பிடித்தார். உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தேன். உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி விட்டு 'இதுதான் அந்த விஷயம். என ஒன்றைக் குறிப்பிட்டேன்.

அவ்வளவுதான் "எப்பொழுது வரட்டும் ஐயா" என உடனே ஒப்புக்கொண்டாள். அந்தக் குடும்பத்தில் எப்படி அமைதி மலர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்

0 comments:

கருத்துரையிடுக