siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சிறுநீரக நோய்கள் நீங்கஇது இனிப்பான எச்சரிக்கை!

 

 

நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி.

‘டெட்ரா பாக்கெட்டுகளில் வரும் ஜூஸ்கள்... 100 சதவிகிதம் ஒரிஜினல் ஜூஸ் எனக் குறிப்பிட்டிருந்தால் ஓ.கே. மற்றபடி வெறுமனே ஃப்ரூட் ஜூஸ் என்கிற அடையாளத்துடன் வருபவற்றில், 30-40 சதவிகிதம் மட்டுமே பழக்கலவையும், மீதியெல்லாம் இனிப்புக்கான சிரப்புமாகவே இருக்கும். பெரிய நிறுவனத் தயாரிப்புகளில் HFCS (High fructose corn syrup) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை விலை அதிகம் என்பதால், சோளத்திலிருந்து எடுக்கப்படுகிற மலிவான, ஒருவித இனிப்பு சிரப்பான இதையே, பல தயாரிப்புகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

நாம் தேடித் தேடி சாப்பிடுகிற சைனீஸ் உணவுகள், நூடுல்ஸ், பிஸ்கட்... இப்படிப் பலதிலும் பிரதானம் சர்க்கரை. ளிஷிணி என முடிகிற எந்த உணவிலும் சர்க்கரை இருப்பதாக அர்த்தம். ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும் போது, கூடுதலாக வேறு எதற்கு?’’ என்பவர், ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்கிறார். ஒரு டீஸ்பூன் என்பது 5 கிராமுக்கு சமம்.

கடினமான உடலுழைப்பு உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் 3 முதல் 5 டீஸ்பூன் வரை அனுமதி. அது சரி... பிறகு சர்க்கரைக்கு என்னதான் மாற்று என்கிறீர்களா? அதற்கும் வழி சொல்கிறார் ஷைனி. ‘‘சுத்திகரிக்கப்படாத (ஹிஸீக்ஷீமீயீவீஸீமீபீ) சர்க்கரை கிடைக்கிறது. பார்வைக்கு சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும் அதுதான் ஆரோக்கியமானது. பழுப்பு நிறத்தில் இருக்கும் எதையும் நாம் விரும்புவதில்லையே...

பழுப்பு சர்க்கரையை சலவை செய்த மாதிரி வெள்ளைவெளேர் என மாற்ற சல்ஃபைட் என்கிற ரசாயனத்தால் பதப்படுத்திய பிறகுதான், விற்பனைக்கு வருகிறது. முன்பெல்லாம் சர்க்கரை, சுலபத்தில் கட்டிதட்டும். இப்போது, மணல் மாதிரி அப்படியே கொட்டுகிறது. காரணம், அதிலுள்ள ‘ஆன்ட்டி கேக்கிங் ஏஜென்ட்’. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனைவெல்லம் பெட்டர். தேனிலும் கலப்படத்துக்குக் குறைவில்லை என்பதால், தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். அதற்காக சர்க்கரைதான் ஆபத்து என தேனையும், கருப்பட்டியையும் அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. அளவு மீறப்படாத வரை எதுவுமே ஆபத்தைத் தருவதில்லை.’’

இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க்கரை (உதாரணத்துக்கு சுகர் ஃப்ரீ) பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். அதை தினமும் பயன்படுத்தினால் எடையைக் குறைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இது எந்தளவு உண்மை? இதனால் பக்க விளைவுகள் வருமா?

ரொம்பவும் தவறான அபிப்ராயம் இது. டயட் செய்கிறவர்கள் பலரும் இந்தத் தவறைச் செய்கிறார்கள். செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக்காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை. 1 டீஸ்பூன் சர்க்கரையில் 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். ஒருநாளைக்கு ஒரு நபருக்குத் தேவையானது 1,200 முதல் 1,300 கலோரிகள் வரை. இதில் காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என காபி, டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரையின் மூலமாகச் சேரும் கலோரிகளைக் கணக்கிட்டால் 40 முதல் 50 கலோரிகள்தான் இருக்கும்.

சர்க்கரையில் இருப்பதென்னவோ வெறும் கலோரி மட்டுமே. வேறு எந்தச் சத்தும் கிடையாது. ஆனால், ‘சர்க்கரையைத் தவிர்த்து, செயற்கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது’ என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நாளைக்கு அதைச் சேர்த்து ஏகப்பட்ட காபி, டீ, குளிர்பானங்களை அருந்துகிறார்கள். குலாப் ஜாமூன், மைசூர்பாகு என விதம் விதமான இனிப்புகளையும் செயற்கை சர்க்கரை சேர்த்துச் செய்து சாப்பிடுகிறார்கள். அந்த இனிப்புகளில் சேர்க்கப்படுகிற நெய், எண்ணெய் போன்றவற்றால் எத்தனை கலோரிகள் ஏறும் என்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

சுக்ரலோஸ், சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர்க்கரை வகையறாக்கள் எல்லாமே கெமிக்கல் கலப்புகள். நீரிழிவு உள்ளவர்களாக இருந்தாலுமே, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த செயற்கை சர்க்கரையை எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் மிகச் சிறந்த, நிரூபிக்கப்பட்ட வழிகள்!

0 comments:

கருத்துரையிடுக