02 ஓகஸ்ட் 2012, |
அமெரிக்காவின் ரோவர்
விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட
உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா) கடந்தாண்டு நவம்பர் மாதம்
செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. 250 கோடி டொலர் செலவில் அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலம் வரும் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான கேலே பகுதியில் சரியான நேரத்தில் ரோவர் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாசா இணை நிர்வாகி ஜான் கிரன்ஸ்பெல்டு குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுடன் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். கலிபோர்னியாவின் பசடெனா ஏவுதள ஆய்வு மையத்தில் இருந்து இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்றார். |
முகப்பு |
0 comments:
கருத்துரையிடுக