siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

 
 வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
2009ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பயங்கரவாதி பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இத்தாக்குதலின்போது 8 பேர் பலியானதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் 7 வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில பயங்கரவாதிகள் பொதுப் போக்குவரத்துக்களில் நகரில் ஊடுரூவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து லாகூரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முல்ரன் பகுதியில் உள்ள காஷிகட் பாலத்திற்கு அருகில் சட்ட அமுலாக்கல் முகவர்கள் வாகனங்களை சோதனை செய்தனர்.
பஸ் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்த பயணி ஒருவர் தப்பித்துச் செல்ல முயற்சித்துள்ளார். இவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது கொல்லப்பட்ட இவர் அப்துல் கபார் குசைஸ்ரனி அல்லது சைபுல்லா என அடையாளம் காணப்பட்டார்.
இவரின் பொதியில் ஒரு கிரேனைட்டும் இரண்டு; துப்பாக்கிகளும் காணப்பட்டன. இவர் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் தெஹ்ரி-ஈ-தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்பதுடன், மரிஉல்லா குழு என அறியப்பட்ட போராளிக் குழுவிலும் பணியாற்றியிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நபர் வங்கிக் கொள்ளைகள் மூலம் போராளிக் குழுவுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இவர் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
முல்ரன் நகரில் முக்கிய இடங்களை இலக்குவைத்து சைபுல்லாவினால் மேற்கொள்ளப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக பொலிஸ் உயர் அதிகாரி கோஹர் நபீஸ் தெரிவித்துள்ளார்.
லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தார் எனவும் அவர் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக