siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தமிழர்களுக்கு நேரடி உதவிகள் வழங்கத் தயாராகிறது இந்தியா இலங்கை அரசு ஊடாக வழங்கப்படும் உதவிகள் மக்களை சரியாகச் சென்றடையாத காரணத்தால்

வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012
news
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிதி உதவிகளை நேரடியாக அந்த மக்களிடமே வழங்குவது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை வைப்பில் இடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசின் ஊடாக இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடையாத காரணத்தினால் இந்திய அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தனும் இந்திய அரசின் மேற்படி நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த அவர் இது தொடர்பாகத் தகவல் வெளியிடுகையில்,
தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசு வழங்கிய நிதியை, இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பது, அங்கு சுற்றுப் பயணம் செய்தபோது தெரியவந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பெயரிலேயே வங்கிக்கணக்கை ஆரம்பித்து, நிதி உதவி வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக