siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 15 ஆகஸ்ட், 2012

முருங்கைக்காய் மேட்டர் உண்மைதானா?

15.08.2012.முருங்கைக்காய்ன்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வர்றது பாக்யராஜ் கெளப்பிவிட்ட கில்மா சமாச்சாரம்தான். சம்சாரத்துக்கெல்லாம் புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா முருங்கைக்காய் சமாச்சாரம் பதிஞ்சிபோச்சு. ஆனா உண்மையிலேயே இந்த முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானான்னு ஆராய்றதுக்கு முன்னாடி அது என்ன சமாச்சாரம்னு தெரியாத இளசுங்களுக்கெல்லாம் ஒரு முன்னோட்டம் குடுத்துரலாம்…
பாக்யராஜோட ‘முந்தானைமுடிச்சி’ன்ற படம்தான் இந்த விசயத்துக்கு அடிபோட்டு இன்னக்கிவரைக்கும் பல தமிழ் சினிமாவுலேயும், ஏன் இந்தி சினிமால கூட இந்த விசயத்தை பத்திப்பேசுற அளவுக்கு செய்ஞ்சிடுச்சி. அந்தப்படத்துல பாக்யராஜீக்கும் ஹீரோயின் ஊர்வசிக்கும் ஒரு இக்கட்டான சூழல்ல கல்யாணம் நடந்திரும். பாக்யராஜ் கல்யாணத்துக்கு அப்புறம் ஊர்வசிகிட்ட போகாம ஒதுங்கியேஇருப்பார். அப்போ ஏதோவொரு பெருசு ஒன்னு ஊர்வசிக்கு முருங்கைக்காய் ஐடியாவைக் குடுத்துரும். உடனே ஊர்வசியும் அன்னக்கி முருங்கைக்காய் பொறியல், முருங்கைக்காய் ரசம், முருங்கைக்காய் சாம்பார்னு சமையல் எல்லாம் முருங்கைக்காயா செய்ஞ்சி வைச்சிரும்.
பாக்யராஜ் வீட்டுக்கு வந்ததும் ஆஹா சமையல் எல்லாமே நல்லா டேஸ்ட்டாயிருக்குன்னு சொல்லி முருங்கைக்காய் அயிட்டங்களை நல்லா கட்டு கட்டுன்னு வயிறு ஃபுல்லா கட்டிருவாரு. அப்புறமா தூங்கலாம்னு படுக்குற பாக்யராஜிக்கு ஃபுல்லா மூடு கெளம்பி ஊர்வசிகிட்ட போகவும் முடியாம, உணர்ச்சிகளை அடக்கவும் முடியாம அவஸ்தைப்படுவாரு பாருங்க. அப்போதாங்க இந்த முருங்கைக்காய் மேட்டர் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாயிடிச்சி. அன்னைலயிருந்து இன்னக்கி வரைக்கும் பல சினிமாவுல இந்த முருங்கைக்காய் மேட்டரை யூஸ் பன்றாங்கன்னா அந்த பெருமையெல்லாம்(!) சத்தியமா பாக்யராஜைத்தான் சேரும். இது நெசமா… பொய்யான்னு தெரியாமலேயே அந்த மாதிரி மேட்டருன்றதால மக்கள் மனசுல பச்சக்குன்னு பதிஞ்சிபோச்சு.
சரி… அறிவியல்ரீதியா முருங்கைக்காய்க்கு நிஜமாகவே ‘அந்த’ உணர்ச்சிகளை தூண்டுற சக்தியிருக்கா?… அந்த உணர்ச்சிகளைத்தூண்டுற சக்தி பல விஷயங்கள்ல இருக்குதான். ஆனா முருங்கைக்காய்ல சத்தியமா அந்த மாதிரி எதுவும் இல்லைன்றதுதான் விஞ்ஞானமும் மருத்துவமும் சொல்ற சேதி. இந்த மாதிரி தமிழ்சினிமா கிளப்பிவிட்ட மகத்தான மருத்துவத்தால பலபேரு இந்த விஷயத்துல பி.ஹெச்.டி ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சவிஷயம்தான் முருங்கைக்காய்ல அந்தமாதிரியெல்லாம் எதுவும் இல்லைன்றது.
முருங்கைக்கீரைல சிட்ரஸ் பழங்களைவிட ஏழுமடங்கு விட்டமின் ‘சி’யும், கேரட்டைவிட நாலு மடங்கு விட்டமின் ‘ஏ’யும் பாலில் இருப்பதைவிட நாலு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தில் இருப்பதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும்தான் நிறைய இருக்குது. அப்படித்தான் முருங்கைக்காய்லகூட… மற்றபடி நம்ம ஹார்மோன்களை தூண்டுற எந்த சமாச்சாரமும் அதுல இல்லைங்க.
உண்மையிலேயே அந்த மாதிரி விஷயத்துக்கு சிறந்த உணவு என்னான்னா
1)இரவு படுக்குறதுக்கு முன்னாடி மிதமான சூட்டுல ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.
2)அவ்வப்போது பேரிச்சம்பழம் நிறைய சாப்பிடலாம்.
3)வெங்காயம் பச்சையா சாலட் மாதிரி நிறைய சாப்பிடலாம்.
4)உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி பருப்புகளும் அதுக்கான சக்தி கொண்டதுதான்.
அதனால முருங்கைக்காய் மேட்டரும் தெருவோரம் லேகியம் விக்கிறமாதிரியான டூப்ளிகேட் சமாச்சாரம்தான்றதை ஜனங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது இனிமேலும் நாம முருங்கைக்காய் சமாச்சாரத்தை நெசமுன்னு நம்பிக்கிட்டு இருந்தா அதுக்குமேல நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லைங்க…!

பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன்: நயன்தாரா

15.08.2012.நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபு தேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன்.

பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன.

சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும்.

திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

டப்பிங் பேசிய காலம்! வியக்க வைக்கும் விக்ரம்!

15.08.2012.1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை, மீரா போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார்.
திறமை இருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம்களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் கண்டிப்பாக தரும் என்று நம்பினார், காத்திருந்தார்.
வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசினார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற பலருக்கும் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். அந்த நடிகனின் திறமையை உணர்ந்து சரியான வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்த படம் சேது. முழு அர்ப்பணிப்போடு அந்தப் படத்தில் நடித்தார் அந்த ஹீரோ.

வெளிவர முடியாத நிலையில் இருந்த சேது படம் பல தடைகளையும் தாண்டி வெளியிடப்பட்டது, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார் அந்த ஹீரோ. ராசி இல்லாத ஹீரோ என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டவர். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தார். பிதாமகன் படத்தில் தன் நடிப்பால் தேசத்தையே தன் பக்கம் திருப்பினார். தேசிய விருதையும் பெற்றார்! தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்குப் பிறகு வித்தியாசம் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அவர் தான் சீயான் விக்ரம்! 16.06.2012 அன்று 6வது விஜய் அவர்ட்ஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருது விக்ரமிற்கு வழங்கப்பட்டது. (படம் – தெய்வத்திருமகள்)
அந்த விருதை அவருக்கு வழங்கியவர் பிரபுதேவா. ஒரு காலத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியவர் தான் விக்ரம் என்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதை அவர்கள் இருவரும் கூட உணார்ந்திருக்க கூடும். விக்ரமின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமானது என்பதை நாம் அந்த நேரத்தில் உணர முடிந்தது.

அதே விழாவில், சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலிக்கு வழங்கப்பட்டது (படம் – எங்கேயும் எப்போதும் ). ஃபேவரெட் ஹீரோ விருது அஜீத்துக்கும், ஃபேவரெட் ஹீரோயின் விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.
செவாலியர் சிவாஜி கணேசன் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கபட்டது. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு மூவரும் இணைந்து எஸ்.பி.பி.க்கு அந்த விருதை வழங்கினார்கள்
.

இணையதளத்தில் உலாவரும் பிரபல நடிகையின் முத்தக்காட்சி! (வீடியோ இணைப்பு)

15.08.2012.தனுஷ் நடித்த 3 படத்தின் கொலவெறி பாடலுக்கு இசையமைத்து புகழ்பெற்றார் இசையமைப்பாளர் அனிருத். இளம் இசையமைப்பாளர்களில் வேகமாக வளர்ந்து வருபவர் அனிருத்.

அந்நியன் படத்தின் மூலம் பாடகியாகவும், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. வேட்டையாடு விளையாடு, ஆயிரத்தில் ஒருவன், கோவா, மெரினா, மன்மத அம்பு ஆகிய படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர்களுடன் ஆண்ட்ரியாவிற்கு நல்ல நட்பு இருந்து வந்தது. கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிருத்தும், ஆண்ட்ரியாவும் லிப்-டூ-லிப் முத்தம் கொடுக்கும் முத்தக்காட்சி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இவர மாதிரி உங்களால வித்த காட்ட முடியுமா!....

 

Tuesday, 14 August 2012,

தனுஷ் படத்திலிருந்து வடிவேலுவுக்கு கல்தா!


14.08.2012.

விஜயகாந்த் மேல் இருந்த கோபம் வைகைப்புயல் வடிவேலுவை அரசியலுக்கு இழுத்து வந்தது அனைவருக்கும் தெரியும்.

தீவிர திமுக விசுவாசியாக மாறி, தேர்தல் பிரச்சாரம் செய்யப் போய் பஞ்சரான வடிவேலுவை, அதிமுக ஆட்சி வந்தபிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக் கூட அவரை நடிக்க அழைக்கவில்லை கோடம்பாக்கத்தில்.

இதில் பெரிய ரோதனை, திமுக ஆட்சியில் இருந்தபோது, தியாகராஜன் இயக்கிய ‘மம்பட்டியான்’ படத்தில் நடிக்க வைத்திருந்தார் அவர். தற்போது வெளியான அந்தப் படத்திலும் வடிவேலுவின் காமெடியும் டர்ர்ர்ர்…! படமும் டர்ர்ரர்..!

வடிவேலு இனி தனது பெயருக்கு முன்னால் இருக்கும் வைகைப்புயல் பட்டத்தை துறந்துவிட வேண்டியதுதான் என்ற நிலையில் அவருக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தார் இயக்குனர் சிம்புதேவன்.

வடிவேலுவை வைத்து ‘இம்சை அரசன் 23-ஆம் புலிக்கேசி’ படத்தை இயக்கிய சிம்புதேவனும், வடிவேலும் நெருங்கிய உறவினர்களாம். தற்போது யூ.டி.வி.தயாரிக்க, தனுஷ் ஹீரோவாக நடிக்க முழுநீள நகைச்சுவைப் ‘மாரீஸன்’என்ற முழுநீள நகைச்சுவை படத்தை இயக்க இருந்தார் சிம்புதேவன்.

இந்த நேரத்தில் தமது உறவு மற்றும் சாதிபாசத்தை காட்ட நினைத்த சிம்புதேவன், தனுஷிடம் கெஞ்சிக்கூத்தாடி, “வடிவேலு அண்ணே! உங்களோட காம்பினேஷனா இந்தப் படத்துல இருந்தா நல்லா இருக்கும்” அவரை சம்மதிக்க வைத்தாராம்.

மேலும் இரவு பகலாக மண்டையை உடைத்துக் கொண்டு, படம் முழுவதும் வருகிற மாதிரி, வடிவேலுவுக்கு ஒரு முக்கிய கேரக்டரையும் வடிவமைத்திருக்கிறார்.

பங்காளி சிம்புதேவனின் கைங்கர்யத்தால், தனக்கு தனுஷ் படத்தில் மீண்டும் ரீ எண்ட்ரி கிடைக்க இருக்கிறது என்ற குஷியில், நண்பர்கள் அத்தனை பேருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலில் ரூ 2 லட்சம் செலவு செய்து பார்ட்டி வைத்திருக்கிறார்.

ஹிச்ஹாக் படத்தின் எதிர்பாராத திருப்பம் போல பார்ட்டி கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தவருக்கும் மொத்த போதையும் வடிந்து போகிறமாதிரி ஒரு ஷாக் செய்தியைச் சொன்னாராம் சிம்புதேவன்.

“ நம்ம படத்துல வடிவேலு வேண்டாம். காரணத்தை அப்புறம் சொல்றேன்னு “ தனுஷ் சொல்றார். கவலைப் பாடாதீங்க. மாரீசனை முடிச்சுட்டு வந்து நாம இம்சை அரசன் இரண்டாம் பாகம் எடுப்போம்” என்று சப்பைக் கட்டு கட்டிவிட்டு நழுவிக்கொண்டாராம்! வைப்புயல் தற்போது தனது பாணியில் ஓநாய் போல ஊளையிட்டு திரிகிறாராம் தனது ஸ்டார் ஹோட்டல் பர்மிட் ரூமில்

சில்க் ஸ்மிதா சாவில் மர்மம்…!


14.08.2012.

குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது தற்கொலை அல்ல, சாவில் மர்மம் இருக்கிறது,” என்று மீண்டும் புகார் கூறியுள்ளார் ஸ்மிதாவின் ஒரே தம்பி நாகவர பிரசாத்.
 1996-ம் அண்டு சில்க் ஸ்மிதா உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டத்துக்காக வந்தபோது, ஆந்திராவிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்திருந்தனர் நாகவர பிரசாத்தும் அவர்கள் தாயாரும்.
 மருத்துவமனை வளாகத்திலேயே, ‘ஸ்மிதாவை கொலை செய்துவிட்டனர், சொத்துக்காக கொன்னுட்டாங்க. அதை விசாரிங்க’, என்று கதறியழுதனர்.
 ஆனால் போலீசார் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த சாவில் இயற்கையாவே ஒரு டஜன் சந்தேகக் கேள்விகளை அன்றைக்கு டிவி – பத்திரிகைகள் எழுப்பியும், போலீசார் பிடிவாதமாக அதை தற்கொலை என்று கூறி கோப்பை மூடிவிட்டனர். சில்க்கின் கூடவே இருந்தவர் என்று கூறப்பட்ட ‘தாடிக்காரர்’ என்ற நபரையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
 15 ஆண்டுகள் கழித்து சில்க்கின் சாவை மீண்டும் நினைவூட்டியுள்ளது, அவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் இந்திப் படம்.
 தன் அக்கா சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார் நாகவர பிரசாத். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடியாகி, இப்போது படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிவிட்டது.
 இந்த நிலையில், மீண்டும் சில்க் ஸ்மிதா சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளார் நாகவர பிரசாத்.
 சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நானும், சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டம். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண் சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில் நடிக்க வைத்தார்.
 சில்க் ஸ்மிதாவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது வதந்திகள் வந்தன. அவை எதுவும் உண்மை கிடையாது. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.
 ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த வீட்டை தனது பெயரில் வாங்க அக்காள் விரும்பினார். ஆனால் கூட இருந்த நபர் தனது பெயரில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால் இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.
 நாங்கள் அலறியடித்து ஓடினோம். எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா எழுதியது போன்ற ஒரு கடிதம் கொடுத்தனர். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா சாவில் மர்மம் இருக்கிறது.
 அலைகள் ஓய்வதில்லை போன்று குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கத்தான் விரும்பினார். ஆனால் காசுக்காக அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். அவரை வைத்து மற்றவர்கள் சம்பாதித்தனர். இப்போதும் அதுதான் நடக்கிறது. செத்த பிறகும் அவரை மோசமாக சித்தரித்து பணம் பார்க்கிறார்கள். பாவம் என் அக்கா, பரிதாபமாக உயிரை விட்டதுதான் மிச்சம்,” என்றார்

‘தாண்டவம்’ பெயரை பயன்படுத்தக்கூடாது வழக்கு

14.08.2012.விக்ரம் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் எஸ்.விஜய், சங்கர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

‘தாண்டவம்’ பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அந்த தலைப்பில் புதுமுக நாயகன் பாலு, சரண்யாமோகன் ஜோடியாக நடிக்க படம் எடுத்தோம். ஆர்.ஷங்கர் இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ‘தாண்டவம்’ என பெயரிட்டுள்ளதாகவும் 15-ந்தேதி ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும் விளம்பரங்கள் வந்துள்ளன.

‘தாண்டவம்’ பெயரில் ரூ. 1.5 கோடி செலவிட்டு படம் எடுத்துள்ளோம். விக்ரம் படத்துக்கு அதை பயன்படுத்தினால் நிதி நெருக்கடிக்கு ஆளாவோம். எனவே ‘தாண்டவம்’ பெயரை விக்ரம் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீதிபதி இந்திராணி முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கோதண்டபாணி, கிஷோர் ஆஜரானார்கள். யு.டி.வி. சார்பில் வக்கீல் சிவம் சிவானந்தராஜ் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மாற்றானின் இசை வெளியீடு மாபெரும் வெற்றி

 14.08.2012.
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருக்கும் படம் மாற்றான். நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
இப்படத்தை அயன், கோ போன்ற வெற்றிப்படங்களைத் தந்த கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். ஏ.ஜீ.எஸ் எண்டர்டைன்மைன்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவை 9 நாட்களில் 150 கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனதை மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கொலிவுட் நடிகைகளான அஞ்சலி, நீது சந்திரா, பூர்ணா, தன்ஷிகா மற்றும் இப்படத்தில் நடித்துள்ள ரஷ்ய நடிகை ஜுலியா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பிரபல பின்னணி பாடகர், பாடகிகளான கார்த்திக், ஹரிச்சரண், வேல்முருகன், சுஜித்ரா போன்றோரின் பாடல்களும் இடம்பெற்றன.
மேலும், கொலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்
 

ஓசியன் லேடி கப்பலில் பயணம் செய்த இலங்கைருக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கியது



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,
 

இலங்கையில் இருந்து எம். வீ. ஓசியன் லேடி (ocean lady ship) கப்பல் மூலம் கனடாவுக்கு அகதியாக சென்ற ஒருவருக்கு கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.

24 வயதான அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளமையால், தாய்நாட்டில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கனடாவின் குடிவரவு சபையினர் இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எம். வீ. ஓசியன் லேடி மற்றும் எம். சீ. சன்சீ கப்பலில் வந்த ஏனையவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையர்வர்களாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஒருவருக்கு இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், ஏனையவர்களுக்கும் வழங்க வேண்டிய கட்டயம் ஏற்படும் என குடிவரவு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்து பரிசீலிப்பதாக கனேடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசியன் லேடி மூலம் கனடா சென்ற 75 பேரில், நான்கு பேருக்கு மாத்திரமே இதுவரையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது