14.08.2012.விக்ரம் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் எஸ்.விஜய், சங்கர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
‘தாண்டவம்’ பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அந்த தலைப்பில் புதுமுக நாயகன் பாலு, சரண்யாமோகன் ஜோடியாக நடிக்க படம் எடுத்தோம். ஆர்.ஷங்கர் இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.
இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ‘தாண்டவம்’ என பெயரிட்டுள்ளதாகவும் 15-ந்தேதி ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும் விளம்பரங்கள் வந்துள்ளன.
‘தாண்டவம்’ பெயரில் ரூ. 1.5 கோடி செலவிட்டு படம் எடுத்துள்ளோம். விக்ரம் படத்துக்கு அதை பயன்படுத்தினால் நிதி நெருக்கடிக்கு ஆளாவோம். எனவே ‘தாண்டவம்’ பெயரை விக்ரம் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதி இந்திராணி முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கோதண்டபாணி, கிஷோர் ஆஜரானார்கள். யு.டி.வி. சார்பில் வக்கீல் சிவம் சிவானந்தராஜ் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக