siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நாடு முழுவதிலும் கட்டம் கட்டமாக மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும்



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012
 

நாடு முழுவதும் மீண்டும் கட்டம் கட்டமான மின்சார தடைகளை ஏற்படுத்தவிருப்பதாக இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையமானது, சீனாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக 400 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன.

தற்போது இரண்டாம் கட்ட பணிகள் 850 மில்லியன் டொலர்கள் செலவில் இடம்பெற்று வருகிறது. இந்த பணிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கண்காணிப்பிலேயே இடம்பெற்றது.

இதன் போது, இந்த நிலையகத்துக்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களுக்கு பதிலாக, சீனாவில் இருந்து இரண்டாம் தர உதுரி பாகங்கள் வரவழைக்கப்பட்டு பொறுத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக