14.08.2012ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்தாலும், சுமாரான படம் என்ற பேச்சே பலரிடம் வெளிப்பட்டது. இந்த படத்தை இயக்க இருந்தவர் அஜித்துக்கு பில்லா என்ற அல்டிமேட் ஹிட் படத்தை கொடுத்த விஷ்ணுவர்தன் தான். ஆனால் பல தயாரிப்பு சிக்கல்களால் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கினார்.பல அறுவை சிகிச்சைகளை தன் உடம்பு கண்டிருப்பதால், உடற்பயிர்ச்சிகளில் ஆர்வம் இல்லாம் வந்தார் அஜித். படத்தில் அவர் ஆடும் போது, அவரின் தொப்பையும் சேர்ந்து ஆடுகிறது என்று பலரும் கமெண்ட் அடிக்க அது வசதியாக இருந்தது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் உடற்பயிர்ச்சிகள் மேற்கொண்டு கட்டுமஸ்தான உடலுக்கு மாறி இருக்கிறார் அஜித்.
இணைய தளங்களில் தல ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.








0 comments:
கருத்துரையிடுக