இலங்கையில் இருந்து எம். வீ. ஓசியன் லேடி (ocean lady ship) கப்பல் மூலம் கனடாவுக்கு அகதியாக சென்ற ஒருவருக்கு கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.
24 வயதான அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளமையால், தாய்நாட்டில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கனடாவின் குடிவரவு சபையினர் இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எம். வீ. ஓசியன் லேடி மற்றும் எம். சீ. சன்சீ கப்பலில் வந்த ஏனையவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையர்வர்களாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஒருவருக்கு இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், ஏனையவர்களுக்கும் வழங்க வேண்டிய கட்டயம் ஏற்படும் என குடிவரவு சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது குறித்து பரிசீலிப்பதாக கனேடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசியன் லேடி மூலம் கனடா சென்ற 75 பேரில், நான்கு பேருக்கு மாத்திரமே இதுவரையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக