siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

கூகுளின் தலைமை அலுவலகம் (வீடியோ இணைப்பு)

14.08.2012.இன்றைய இணையவுலகில் கூகுளால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கூகுள் தன்னகத்தே பிளாக்கர், யூடியூப், பிக்காச, ஜிமெயில் இது போன்று பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது.
நாம் அனைவரும் ஒரே கூகுள் கணக்கு மட்டும் வைத்து கொண்டு இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது.
google என்னும் இந்த சொல் GOOGOL என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.
கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும்.
அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination” என்று குறிப்பிட்டுள்ளார். Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது.
அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான். ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜியம் வருவது.
இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

       

0 comments:

கருத்துரையிடுக