siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நோபெல் பரிசு யார் யாருக்கு கிடைக்கும்.


Friday 05 October2012.By.Rajah.வாடிக்கையாளர்களிடமபணம்வசூலிக்கும் சூதாட்டக்காரர்கள். உலகின் மிக உயரிய விருதான, நோபல் பரிசுகள், அடுத்த வாரம் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது.
உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக சூதாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.

சீன எழுத்தாளர் மோ யான், ஜப்பானிய இலக்கியவாதி ஹருக்கி முரகாமி, எகிப்திய தன்னார்வலர் மேகல் கோப்ரான் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைக்கும் எனக் கூறி, சூதாட்டக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து வருகின்றனர்.
வரும், 8ம் தேதி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயரும், 9ம் தேதி, இயற்பியலுக்கான பரிசும், 10ம் தேதி, ரசாயனத்துக்கான பரிசும், 11ம் தேதி, இலக்கியத்துக்கான பரிசும், 12ம் தேதி, அமைதிக்கான பரிசும், 15ம் தேதி, பொருளாதாரத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளன

வியாழன், 4 அக்டோபர், 2012

Missed Calls ஊடாக காதல் மலர்ந்து!ஏமாற்றப்பட்டு கற்பம்


Thursday04October2012 By.Rajah.தரிக்கும் இலங்கை பெண்கள்! .இனந்தெரியாத நபர்கள் மூலம் வரும் Missed Calls ஊடாக காதல் மலர்ந்து இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படு வதுடன் சிலர் கற்பம் தரிக்கும் நிலைக் கும் உள்ளாவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத் தின் சமூக வைத்திய விசேட நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமணமான ஆண்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இளவயது பெண்களை ஏமாற்றுகின்றனர் எனவும் இலங்கையில் இளவயதில் 6 வீதமானவர்கள் கர்ப்பம் தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைப்பொன்றுடன் இணைந்து கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்

நாமல் ராஜ பக்ஷவுக்கும் ௭னக்கும் இடையில் காதல் ஏதும்

Thursday04October2012 .By.Rajah.ஏதும் கிடையாது!முதல் ஒரு காதல் முறிந்து விட்டது!ஹிரு ணிக்கா
 
நாமல் ராஜ பக்ஷவுக்கும் ௭னக்கும் இடையில் காதல் ஏதும் கிடையாது. அவர் ௭னது நல்ல நண்பர். அதைத் தான் சிலர் இவ்வாறு காதல் ௭ன நினைக் கிறார்கள் ௭ன ஹிரு ணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
நான் கடந்த ஐந்து வருடங்களாக அமைச்சர் பியசேன கமகேயின் மகனான ரந்திம கமகேயை காதலித்து வந்தேன். ஆனால் தந்தையின் மறைவுக்குப் பின்னர் அந்தக் காதல் முறிந்து விட்டது ௭னவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை சென்ற காலகட்டத்திலும் நாமலுடன் காதல் இருக்கிறதா ௭ன பலர் ௭ன்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களு க்கும் இதே பதிலைத்தான் நான் கூறினேன்.
ரந்திமவுக்கும் ௭னக்குமிடையிலான காதல் முறிவடைந்துள்ள போதிலும் ௭ன்னால் அந்தக் காதலை மறக்கமுடியவில்லை ௭ன வும், நாமலை நான் காதலிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்

கிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி

Thursday04October2012,By.Rajah.வந்து கொண்டிருந்த பேரூந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதல் 10பேர் காயம்!
 
படையினரின் தேசிய மாணவர் படையணி பாண்ட் வாத்திய அணிவகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த பேரூந்து விபத்திற்குள்ளாகியது.
இவ் விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 10மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று யாழ்.துரைப்பா விளையாட்டரங்கில் தேசிய மாணவர் படையணின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சிக்காக படையினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து பேரூந்தொன்று யாழ்.நோக்கி வந்துள்ளது.

இந்தபேருந்து ஏ9 வீதியில் பளை பகுதியில் எதிரே சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் வட்டக்கச்சியைச் சேர்ந்த இராஜேந்திரகுமார் என்ற ஆசிரியர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் படையினரின் ஏற்பாட்டில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். இதேபோல் காயமடைந்த மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இராணுவத்தினர் தம்மீது பழி வீழ்ந்துவிடும் என்ற நிலையிலேயே படுகாயமடைந்த ஆசிரியரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவராமல், அனுராதரபுரத்திற்கு மாற்றியுள்ளனர் என ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேறாது! ரவி விஜயகுணரத்ன!


Thursday04October2012.By.Rajah. தமிழகமீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை என வடக்கு பிராந்திய இலங்கைக் கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன கூறியுள்ளார்.
போர் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்படும் பணிகளை இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
ஊடகவியலாளர்களிடம் வடக்கு பிராந்திய இலங்கைக் கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன தெரிவித்தவை யாதெனில்:
காங்கேசன்துறையில் ஆறு கட்டங்களாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டுச் சண்டைக்கு முன்பு, இப்பகுதி விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
இங்குள்ள கடல் பகுதியில் சுமார் 10 கப்பல்கள் தற்கொலைப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. கடலுக்குள் புதைந்த அவற்றின் இடிபாடுகளை அகற்ற ஆறு கட்ட திட்டத்தை இந்திய அரசு உதவியுடன் இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதில், முதல் மூன்று கட்டங்களாக, கடலுக்குள் சிக்கிய கப்பலின் இடிபாடுகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டன. இப்போது மீதமுள்ள மூன்று கட்ட நடவடிக்கைகளில், கடலில் கப்பல்கள் வந்து செல்ல வசதியாக, அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அகழ்வாய்வு நிறுவனம் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இப்போது இந்தியாவின் காரைக்காலில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வெளியே மயிலாடி என்ற சிறிய துறைமுகத்தின் ஆழமான கடல் பகுதியில் நிறுத்தப்படுகின்றன.
அங்கிருந்து சிறு கப்பல்கள் மூலம் சரக்குகள் காங்கேசன்துறை வழியாக வடக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவில் சேது கால்வாய்த் திட்டம் நிறைவேறுவதை எங்கள் நாடு மிகவும் விரும்புகிறது. அத்திட்டம் செயல்வடிவம் பெற்றால் இலங்கை-இந்தியா இடையேயான வர்த்தகம் பன்மடங்கு உயரும். இந்தத் திட்டத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை வலுப்படுத்தப்படும். நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து ஊடுருவ முயலும் நடவடிக்கைகளும் ஒடுக்கப்படும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதாகத் தமிழகத்தில் பரவலாக பேசப்படுவதை நாங்கள் அறிகிறோம். ஆனால், அதில் உண்மை இல்லை. பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பகுதியில் இருந்து பகலில் புறப்பட்டு நடுக்கடலில் தங்குகின்றனர். நள்ளிரவில் அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி காங்கேசன்துறை, கச்சத்தீவு அருகே வருகின்றனர்.
டிராய்லர் கப்பல்கள் மூலம் அவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் உள்ள மீன் வளத்தைச் சுரண்டுகின்றனர். மீண்டும் அதிகாலை வருவதற்குள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று விடுகின்றனர்.
இலங்கைப் போரின்போது, இவ்வாறு தமிழத்தைச் சேர்ந்த மீனவர்கள் வாடிக்கையாக செயல்பட்டனர். இப்போது வடக்குப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது. மீள் குடியேற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தங்களது வாழ்வாதாரத்துக்கு உரிய மீன் வளத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எடுத்துச் செல்வதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றனர். அதனால் அவர்களுக்குள்ளாகவே சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசி சமரசத்துக்கு வர வேண்டும்.
இந்திய, இலங்கை மீனவர்களிடையே நீடித்து வரும் மீன்பிடிப் பிரச்சினைக்கு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளே காரணம் என்று இலங்கை கடற்படை குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் மீன்வள நிறுவனங்களை நடத்தி வருவதாக அறிகிறோம். அவர்கள் அதிக மீன் வழங்கும் மீனவர்களுக்கு அதற்குத் தக்கபடி கூலி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிக மீன் தேவையைக் கருதி, அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயல்வதாக அறிகிறோம்.
அதனால் ஒட்டுமொத்தமாக நாங்கள் தமிழக மீனவர்களைக் குற்றம் கூற விரும்பவில்லை.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை.
எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை.
அந்த அளவுக்கு எங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
இலங்கைக் கடற்படையில் பணியாற்றும் நான் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள். எங்களுக்கு இந்தியர்கள் வழிகாட்டி போன்றவர்கள் என்றார் ரவி விஜயகுணரத்னே

புதன், 3 அக்டோபர், 2012

பெயரைக் கேட்டு சுட்டுக்கொன்ற



Wednesday03October2012.By.Rajah.
தீவிரவாதிகள். நைஜீரியாவின் 46 மாணவர்கள் பலி. நைஜீரியா நாட்டின் வட பகுதியில் அடமாவா மாநிலத்தில் முவி நகரில் பாலிடெக்னிக் மாணவர்கள் தங்கி இருக்கும் ஒரு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கத்தியாலும் வெட்டினார்கள்.

இதில் 46 மாணவர்கள் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் ராணுவ உடை அணிந்து இருந்ததாகவும், ஒவ்வொரு மாணவரையும் பெயரை கூறும்படி கேட்டு அவர்கள் சுட்டதாகவும், சில மாணவர்களை விட்டு விட்டதாகவும் அந்த பாலிடெக்னிக்கின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்
         

பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க மகளிருக்கான

 Wednesday03October2012.By.Rajah. பிரத்யேக இரயில்கள். இந்தோனேஷிய அரசு அதிரடி.
நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை நாட்களில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் தெற்கேயுள்ள போகாருக்கும் இடையே 8 சிறப்பு ரயில்கள் விடப்படும்.
இளஞ்சிவப்பு நிற பேனர்கள் மற்றும் சின்னங்களுடன் இந்த ரயில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும் நேரத்தில் ரயில்களில் பிராயணம் செய்யவது பாதுகாப்பாக இல்லை என்று இந்தோனேசியப் பெண்கள் புகார் கூறியிருந்தனர்.
ரயில்களில் பெண்களுக்காக சில பெட்டிகளை ஒதுக்கும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.
ஆனால் அது போதுமானதாக இல்லை என்று சில பிரயாணிகள் கருதுகின்றனர்            

வளர்த்த பன்றிகளுக்கே இரையானாரா விவசாயி? அமெரிக்காவில் பரபரப்பு.

Wednesday 03 October 2012.By.Rajah.அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் அவர் வளர்த்த பன்றிகளால் கொல்லப்பட்டு உணவனாதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
70 வயதான டெர்ரி வான்ஸ் கார்னர் என்ற இந்த விவசாயி, கடந்த புதன் கிழமையன்று , அவரது பன்றிப் பண்ணையில், அவர் வளர்த்து வரும் பன்றிகளுக்குத் தீனி போட சென்றவர் திரும்பி வரவில்லை என்று தெரிய வருகிறது.
அவரது உறவினர் ஒருவர்,பன்றிகள் வளர்க்கப்படும் வேலியிடப்பட்ட வளைவுக்குள், அவரது பொய்பல் செட் மற்றும் அவரது உடலில் சில துண்டுகளைக் கண்டார். அவரது உடலின் பிற பாகங்கள் உண்ணப்பட்டுவிட்டிருந்தன.
அவர் ஒருக்கால் திடீரென்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது பன்றிகளால் அவர் தடுக்கி வீழ்ந்து பின்னர் அவைகளால் சாப்பிடப்பட்டிருக்கலாம் என்று விசாரித்து வரும் அதிகாரிகள் கூறினர்

கொழும்பில் பாடசாலைச் சிறுமிகள்


Wednesday03October2012.By.Rajah. முன்னிலையில் தினமும் நிர்வாண போஸ் கொடுத்து வந்த நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு உள்ளார்.
இவரின் பெயர் அமித ரொஷான். ஹொரணவைச் சேர்ந்தவர். எஜமானனின் வாகனத்தில் தினமும் ஸ்ரீமாவோ பாலிக வித்தியாலயத்துக்கு வருவார்.
மாணவிகளை காண்கின்றபோது வாகனத்தை நிறுத்தி ஹோர்ன் அடிப்பார். சிறுமிகள் திரும்பிப் பார்ப்பார்கள்.
அப்போது வாகனத்தில் இருந்தபடியே கீழாடையை நீக்கி பிறப்புறுப்பை காட்டுவார். இவரின் செய்கையை கண்டு சிறுமிகள் வெட்கப்பட்டுச் சிரிக்கின்றமை வரை ரொம்பவே குஷிப்படுத்தி விடும்.
இவரின் அநாகரிக நடவடிக்கை குறித்துப் பாடசாலையின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருந்தன.
இது வரை காலமும் இவர் பாதுகாப்பு ஊழியர்களிடம் அகப்படாமல் இலாவகமாக தப்பி வந்திருக்கின்றார். ஆயினும் நேற்று முன் தினம் வசமாக மாட்டிக் கொண்டார்.
பாதுகாப்பு ஊழியர்கள் இவரை கறுவாக்காட்டுப் பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர்.
கறுவாக்காட்டுப் பொலிஸார் இவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.
நீதிமன்றம் இவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டு உள்ளது

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன்

          
 
Wednesday03October2012.By.Rajah. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம்! இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இத்திட்டம் ஆரம்ப வைபவம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதன்போது இப்பகுதியில் ஜந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொது சந்தைக் கட்டிடமும் இவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பொது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
பொது மக்கள் எவரும் குடியிருக்காத இப்பகுதியில் இந்திய வீட்டுதிட்டம் வழங்கப்படவுள்ளது என்று கூறி அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராணுவத்தினரது ஏற்பாட்டில் பொது மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தனி பஸ்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இது தவிர, இந்நிகழ்வில் வரவேற்புக்காக அழைத்துவரப்பட்ட பெண்கள் கட்டாயப்படுத்தி நீல நிலத்திலான சேலை அணிவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு பொது மக்களின் கைகளிலும் இந்திய - இலங்கை கொடிகளை கட்டாயப்படுத்தியே வழங்கியதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஸ மதுவில் மயங்கி இருந்தாரா?
இந்நிகழ்வுகளுக்கு முன்னர் மடுவில் நடைபெற்ற இந்திய வீட்டுதிட்ட நிகழ்வின் பின்னர் கிளிநொச்சி பகுதியிலுள்ள இராணுப்வபடை முகாமிலேயே இவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடாகியிருந்ததோடு யாழ். இராணுவத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்திருந்ததாக தெரியவருகின்றது.
இவைகளைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ வழமைக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சந்தைக் கட்டிடத்தை திறக்கும் படி பசில் ராஜபக்ஸவை அழைத்த போது அவர் அமைச்சர் டக்ளஸ் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டவர்களை திறக்கும்படி அழைத்து விட்டு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இறுதியாக சந்தை கட்டிடத்தினை நாடா வெட்டி மட்டும் திறந்து வைத்ததோடு இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் உரையாற்றாமல் மிக வேகமாக நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வந்த வேகத்தில் திரும்பி சென்றுள்ளார்.