| இணையத்தில் முஸ்லிம்களுக்கு
எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற
இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு
தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையத்தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் www.mehr.ir என்ற பெயரில் புது இணையத்தளத்தை ஈரான் அரசு தொடங்கி உள்ளது. இதில் ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 11 டிசம்பர், 2012
யூடியூப்புக்கு பதிலாக ஈரானில் புதிய இணையத்தளம் தொடக்கம்
திங்கள், 10 டிசம்பர், 2012
தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய DJக்கள் பகிரங்க மன்னிப்பு.
இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்ப மருத்துவ அறிக்கை கசிவுக்கு காரணமாக இருந்த நர்ஸின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் இன்று முதன்முதலாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி, தங்களது வருத்தத்தை கண்ணீருடன் தெரிவித்தனர்.
Mel Greig மற்றும் Michael Christian ஆகிய அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் இன்று காலை தங்களது 2Day FM வானொலி நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தங்களது விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான செய்கையால் தாயை இழந்து வாடும் நர்ஸின் குழந்தைகளிடம் தாங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அழுதுகொண்டே கூறிய Mel Greig தங்களது தவறான செய்கையால் நர்ஸ் Jacintha Saldanha தற்கொலை செய்துகொண்டது, தங்களது இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டது என்றும் இதற்காக நாங்கள் நர்ஸ் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினர்.

ரஷ்ய ஆற்றின் கீழே கொழுந்துவிட்டு எரியும் எரிமலைக்குழம்பு.
மாயன் காலண்டரின் மர்மமா? ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.{புகைப்படங்கள்,}
ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
வோல்கானா என்று சொல்லப்படும் இந்த நெருப்புக்குழம்புகளை இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் படமெடுத்த நாசா, அதன் வெப்பநிலையை கணக்கிட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் Peninsula அருகிலுள்ள பனிமலையின் ஐஸ்கட்டிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
ஆபாசக் காட்சிகளைப்போன்று தாமும் வீட்டில் செய்ய நினைத்த?
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து பத்து வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத வேளையில் 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று இறுவட்டுக்களை கண்டெடுத்துள்ளனர். மேற்படி இறுவட்டுக்களை தமது வீட்டிலுள்ள கணனியில் போட்டு பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் பார்வையிட்ட இறுவட்டுக்களில் ஒன்றில் ஆபாசப்படக்காட்சிகள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அயல் வீட்டிலுள்ள 10 வயது சிறுவனை அழைத்து தாம் அவ் இறுவட்டுக்களில் அவதானித்த ஆபாசக் காட்சிகளைப்போன்று அச் சிறுவனுடன் நடந்து கொண்டுள்ளனர்.
மேற்படி துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுவன் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது
இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுத்துநிறுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்றுவரும் கைதுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கொழும்பு ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இராணுவத்தினர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களையும் தாக்கிக் கைதுசெய்துள்ளனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி அவர்களின் இயல்பு வாழ்வினைக் குழப்பும் நோக்குடனேயே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி என காப்பெற் வீதிகள் மட்டுமே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இம் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் போன்ற எவையுமே வடக்கில் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம் மக்களின் இயல்பு வாழ்வினை குழப்பும் நோக்குடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்கின்றனர்.
இதனால் வட பகுதித் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய தளபதி பலி: அல்கொய்தா இயக்கத்துக்கு பின்னடைவா?
| அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி படுகொலை
செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள வஜிரிஸ்தான் பகுதியே அல்கொய்தா தீவிரவாதிகளின்
புகலிடமாக அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி அபு ஜாயித் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கத் தளபதியான அபு யாஹ்யா அல் லிபி உயிரிழந்ததை தொடர்ந்து, அவன் இடத்தில் அமர்த்தப்பட்டவன் தான் இந்த அபு ஜாயித். அபு ஜாயித், அமெரிக்க தாக்குதல்களில் பலியாகி இருப்பது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. இது குறித்து வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அறிவோம். அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தளபதி பலியானதாகவும் எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் பலியானது யார் என்பதை எங்களால் உறுதி செய்ய முடியாது என கூறினர் |
போபா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 600 பேர் பலி: மீண்டும்
|
பிலிப்பைன்ஸை புரட்டி
போட்ட போபா புயலுக்கு, இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தற்போது பிலிப்பைன்சின் வடபகுதியில் 250 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்
கொண்டிருக்கும் இப்புயல், மீண்டும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 250 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தாக்கிய புயலின் தாண்டவத்திலிருந்தே மக்கள், இன்றளவும் வெளிவராத நிலையில் சிக்கி தவிக்கின்றனர். பல கிராமங்கள் அடியோடு நாசமாகி விட்டதால், நிவாரண பணிக்கு சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது{காணொளி, } |
சனி, 8 டிசம்பர், 2012
அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம்
நியூயோர்க்கிலுள்ள ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது. நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்திருக்கின்றன.
மேலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் அரசாங்கம் ஏதோவொன்றை மறைத்து வைத்துக்கொண்டு செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மக்களுடைய மனங்களை வெல்லாமல், யுத்த வெற்றியின் களிப்பில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆபத்தானவை ஒவ்வொருவரும் தங்களது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏது நிலைகள் வேண்டும். ஆனால் அது இல்லை.
அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. இராணுவத்தினரின் அதிகளவு பிரசன்னத்தை தமிழர் தாயகப் பிரதேசங்களில் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேசியிருக்கின்றோம். தற்போது எமது விஜயத்தின் முக்கிய நோக்கம் தமிழர்களுடைய மனோநிலையை அறிவதே.
எனவே இது குறித்து நாம் அக்கறையுடனிருக்கின்றோம் என குறிப்பிட்டனர். மேலும் இந்த குழுவினர் இன்று காலை யாழ்.அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் ஆகியோரை யாழ்.நகரில் சந்தித்து பேசினர்.
இதேவேளை, தமிழர்களின் பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் கேள்விகேட்ட தென்னாபிரிக்க பிரதிநிதி, தழிழர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியிருக்க அனுமதிக்காமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சந்திப்பில் இலங்கையின் ஜ.நா பிரதிநிதி, பாலிதகோஹன்ன உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்{புகைப்படங்கள்காணொளி,}
.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது. நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்திருக்கின்றன.
மேலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் அரசாங்கம் ஏதோவொன்றை மறைத்து வைத்துக்கொண்டு செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மக்களுடைய மனங்களை வெல்லாமல், யுத்த வெற்றியின் களிப்பில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆபத்தானவை ஒவ்வொருவரும் தங்களது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏது நிலைகள் வேண்டும். ஆனால் அது இல்லை.
அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. இராணுவத்தினரின் அதிகளவு பிரசன்னத்தை தமிழர் தாயகப் பிரதேசங்களில் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேசியிருக்கின்றோம். தற்போது எமது விஜயத்தின் முக்கிய நோக்கம் தமிழர்களுடைய மனோநிலையை அறிவதே.
எனவே இது குறித்து நாம் அக்கறையுடனிருக்கின்றோம் என குறிப்பிட்டனர். மேலும் இந்த குழுவினர் இன்று காலை யாழ்.அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் ஆகியோரை யாழ்.நகரில் சந்தித்து பேசினர்.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)