| வடகொரியாவில் சந்தேகத்தின்
பேரில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளிவிவகாரத்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட்
கூறுகையில், வடகொரியாவில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல்
எங்களுக்கு உறுதிபட தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளின் நலனை காப்பதை தவிர எங்களுக்கு வேறெந்த முக்கியத்துவமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு தூதரக உறவு கிடையாது என்பதால், அந்நாட்டில் உள்ள அமெரிக்க மக்களின் பிரச்னைகளை கையாளும் அதிகாரத்தை அங்குள்ள சுவீடன் தூதரகத்துக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் பய் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர், நவம்பர் மாத தொடக்கத்தில் வடகொரியாவில் கைதுசெய்யப்பட்டார். ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றிருந்த அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 13 டிசம்பர், 2012
அமெரிக்கா பிரஜை ஒருவர் வடகொரியாவில்
ஜெஸிந்தா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது?
| லண்டனில் மர்மமான
முறையில் மரணமடைந்த செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன்
பொலிசார் இன்று வெளியிடுகின்றனர்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர். இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று வெளியிடுகின்றனர். அவரது உடலை கர்நாடக மாநிலம் மங்களூருக்கு கொண்டு வருவதற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஜெஸிந்தா கணவருக்கு உதவ முன்வந்துள்ளனர். குறும்பு தனமான தகவலை ஒலிபரப்பிய, அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மெல் க்ரெய்க் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் தாங்கள் செய்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஜெஸிந்தா, இறப்பதற்கு முன்பு குறிப்பு எழுதி வைத்து விட்டு சென்றதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அக்கடிதத்தில் என்ன உள்ளது என்பதை கணவர், ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அவரது மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் இன்று வெளியிடுகின்றனர் |
புதன், 12 டிசம்பர், 2012
புதிய குடிவரவாளர்களை உள்வாங்கும் விடயத்தில் ஆறாவது இடத்தில் கனடா
| பொருளாதார வளர்ச்சி மற்றும்
அபிவிருத்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் கனடா புதிய குடிவரவாளர்களை
வரவேற்பதில் ஆறாம் இடத்தில் இருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
பாரிஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி
அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் பெரும்பான்மையானவை வளர்ச்சியடைந்த
நாடுகளாகும். இந்த நாடுகளில் புதிய குடிவரவாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கனடாவின் மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும். இவர்களில் 18 வீதமானோர் கடந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்தவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றைய அங்கத்துவ நாடுகளில் இத்தொகை 22 வீதமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்கு வருகை தந்த புதிய குடிவரவாளர்களில் 54 சதவீதம் பேர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் மற்றைய அங்கத்துவ நாடுகளில் சராசரி 31 விழுக்காட்டினர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் இருக்கின்றனர். 2010ம் ஆண்டில் கனடா ஐந்தாவது இடத்தில் இருந்ததும் 2012ல் குடிவரவாளர்கள் தொகையில் கணிசமான முன்னேற்றமேற்படாத காரணத்தால் அது ஆறாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன |
விமான நிலையத்தில் இலங்கை மாடலிங் பெண் தற்கொலை?
மாடலிங்க் தொழிலில் உள்ள இலங்கை பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் தற்கொலை செய்ய முயன்ற போது பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டு, பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த மாடலிங் பெண், Shamla, தனது மாடலிங் தொழில் பணி காரணமாக சென்ற வாரம் புதுடில்லிக்கு வந்திருந்தார். பின்னர் அவர் தன்னுடைய நாட்டிற்கு திரும்பி செல்வதற்காக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் போக வேண்டிய விமானம் ஏற்கனவே கிளம்பிவிட்டது. இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண், விமானநிலைய வளாகத்திலேயே இரண்டு நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
இவருடைய நிலைய கவனித்த விமான நிலைய பாதுகாவலர்கள் தங்களது உயரதிகார்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இவர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டார். ஒருசமயத்தில் திடீரென விமான நிலைய மேல் வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அங்கு மறைந்திருந்த பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அவர் எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
பின்னர்தான் அவர் தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டதால், மன அழுத்தம் அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக வேறொரு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்
செவ்வாய், 11 டிசம்பர், 2012
ஜேர்மனியின் ரயில் நிலையத்தில் குழாய் வெடிகுண்டு?
| ஜேர்மனியில் உள்ள பான் ரயில்
நிலையத்தில் ஒரு பை நடைபாதையில் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் அதில் வெடிகுண்டு
இருக்கலாம் என்று அச்சம் உண்டாவதாகவும் தொலைபேசித் தகவல் கிடைத்தது.
உடனே, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படையினர் விரைந்து வந்தனர். அந்தப்
பையிலிருந்த குழாய் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதற்காக அரைமணி நேரம் அந்த இடத்திற்குள் யாரையும் வரவிடவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் பான் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் பல ரயில்கள் ரத்தாயின. ஓர் இளைஞர் நடைபாதையில் ஒரு பெரிய பையை வைத்துவிட்டுப் போனதை சிலர் பார்த்தனர். வெகுநேரமாகியும் அந்தப் பையை எவரும் வந்து எடுத்துச் செல்லாததால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப்பைக்குள் ஒரு குழாய் வெடிகுண்டும், ஒரு கடிகாரமும் இருந்தன. வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததும் மக்கள் அச்சமின்றி நடமாடினர். சிறிது நேரத்தில் வேறோர் இடத்தில் ஒரு காலணிப் பெட்டி அனாதையாகக் கிடப்பதைக் கண்டு அதற்குள் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று பயணிகள் அஞ்சினர். உடனே பொலிசாரும், வெடிகுண்டுப் படையினரும் வந்து அது வெறும் பெட்டிதான் என்பதை உறுதி செய்தனர். இதனால் கோலோன் செல்லும் ரயில்கள் பான்-பியுல் வழியாகத் திருப்பிவிடப்பட்டது. தடுமாறிய பயணிகள் வாடகைக் கார்களில் ஏறிச் சென்றனர். வெடிகுண்டு இருந்த ரயில்வே கட்டிடத்திற்குள் பொலிசார் யாரையும் அனுமதிக்கவில்லை. |
சுவிஸ் பிரஜையாக மாற விரும்பும் பொப் பாடகர்
| பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது
பாடலாசிரியர் மற்றும் பொப் இசை பாடகரான ஜேம்ஸ் பிளண்ட் வெர்பியரில் La vache (பசு)
என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்திருந்தார்.
அங்கு நடந்த பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெர்பியர் எனது
இல்லமாக தோன்றுகிறது. நான் சுவிஸ் குடியுரிமை பெற்று இங்கு தங்கவே விரும்புகிறேன். எனக்கு உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டிலும் சமையலிலும் அதிக ஈடுபாடு இருப்பதால் இந்த இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக உள்ளது என்றார். பிளண்டருக்கு வெர்பியரில் 2007ம் ஆண்டு முதல் ஒரு வசந்த மாளிகை உண்டு. இளங்கோடை காலங்களிலும் இவர் இந்த வீட்டில் வந்து தங்கியிருப்பதை பெரிதும் விரும்புவார். வலாய்சில் உள்ள உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு விடுதிகளில் தங்கி விளையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் இப்போது தொடங்கியிருக்கும் உணவகம் 2730 மீட்டர் உயரத்தில் அழகான மலைக்காட்சிகளுடன் விளங்குகிறது. முன்னாள் இராணுவ வீரரான இவர், அந்நாட்டின் உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு குழுவிற்கு தலைவராக இருந்தார். இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றிகள் பல பெற்றிருக்கிறார் என பிரித்தானிய செய்தித்தாள்கள் இவரை போற்றுகின்றன. இதையடுத்தே கடந்த 2005ம் ஆண்டில் பொப் இசைக்கலைஞராக உருவெடுத்தார். இவருடைய BACk TO BETLAM என்ற பாடல் தொகுப்பு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. இவருடைய 3 பாடல் தொகுப்புகளும் 18மில்லியன் பதிப்புகள் விற்றுத்தீர்ந்தன. தற்போதும் கூட ஜேம்ஸ் பிளண்ட் புதிய இசைத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறார். இந்த புதுவருட இரவில் பசுவைப்போல வேடமணிந்து தனது விடுதியை சுற்றி வரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. |
ஐ.நாவின் சிறப்பு ஆலோசகராக மலாலாவின் தந்தை நியமனம்
| தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி
மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய், ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு
ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான சிறப்புத் தூதர் கோர்டன்
பிரெளன் அறிவித்தார். அவர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவும், கல்விக்கான பிரசாரத்தில் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றுவார். 2015ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற மலாலாவின் திட்டத்தை, ஜியாவுதீன் நிச்சயம் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார். மேலும் மலாலாவின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 12ஆம் திகதியை உலகில் அனைத்து சிறுவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. |
ஜப்பானில் மேலுமொரு அணு மின்நிலையம் மூடப்படும் சாத்தியம்
| கடந்த ஆண்டு ஜப்பானில்
ஏற்பட்ட இயற்கை அழிவுகளினால் புகுஷிமா அணுமின் நிலையம் கசிவு ஏற்பட்டு மின்
உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மற்ற அணுமின் உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வுப்பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திசுரூகா அணுமின் நிலையத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு செய்த போது இரண்டாவது ரியாக்டர் இருக்கும் இடம் பூமி அதிர்ச்சி ஏற்படும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 1,160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஜப்பான் அணுமின் உற்பத்திக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டாவது ரியாக்டர் கடந்த 1987 இல் அமைக்கப்பட்டதாகும் |
யூடியூப்புக்கு பதிலாக ஈரானில் புதிய இணையத்தளம் தொடக்கம்
| இணையத்தில் முஸ்லிம்களுக்கு
எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற
இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு
தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையத்தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் www.mehr.ir என்ற பெயரில் புது இணையத்தளத்தை ஈரான் அரசு தொடங்கி உள்ளது. இதில் ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


























