siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 24 டிசம்பர், 2012

ஜெயிலில் இருக்கும் கொலைகாரனை காதலிக்கும்



சகோதரியை கொலை செய்தவனை, அர்ஜென்டினாவை சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவின், சான்டா குருஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டர் சிங்கோலானி. இதே பகுதியை சேர்ந்த மாடல் அழகி ஜொகானாவை கொலை செய்ததாக, 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.ஜொகானாவும், எடித் கசாஸ் இருவரும் இரட்டை சகோதரிகள். 2010ம் ஆண்டு, ஜூலை மாதம் ஜொகானா, படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டரை, தீவிரமாக காதலிக்கிறார் ஜொகானாவின் சகோதரி, எடித் கசாஸ். இதற்கு எடித்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார் எடித்."என் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என, கூறிய எடித், 21ம்தேதி, காதலர் விக்டரை மணக்க தயாராக இருந்தார்.பொதுமக்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடப்பதற்கு, அர்ஜென்டினா கோர்ட், தடை விதித்துள்ளது. கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், விக்டர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வரும், 31ம்தேதி, இந்த திருமணம் குறித்து, கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது.

குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு

         
 
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், தமது கோரிக்கைக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஏற்கவே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு 30 நாள் வீசாவே வழங்கப்படுகின்றது.
இதற்காக 50 அமெரிக்க டொலர் அறவீடு செய்யப்படுகின்றது.
வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்!


கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம் கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல் காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு வியாபாரிகள் ஊனமுற்ற தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள முஸ்லீம் காடையர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தமது அட்டகாசத்தை காட்டி வருகின்றனர்.

கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ள போதிலும் இவன் சிங்களவன் என்பதால் விரைவில் விடுதலை செய்யப்படுவான்

அனர்த்த பிரதேசங்களைப் பார்வையிட்ட??



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பாலம் பெருக்கெடுத்து வீதி முற்றாக தடைப்பட்ட நிலையில் வாகரைப் பிரதேசத்தின் திருமலை எல்லை பகுதி வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த நிலையிலும், பொலநறுவை பாராக்கிரம சமூத்திரம் பெருக்கெடுத்து கதிரவளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, வாகரை, தட்டுமுனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, கண்டலடி, பால்ச்சேனை, பனிச்சங்கேணி, காயான்கேணி, இறாலோடை, ஆலங்குளம், மாங்கேணி, மாவடிஓடை, மதுரங்கேணிக்குளம், கட்டுமுறிவு, தோணிதாட்டமடு, வாகரை மத்தி உட்பட்ட பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது{புகைப்படங்கள்,}.


இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடங்களில் சிலவற்றுக்கு சென்று பார்வையிட்டார். அதாவது கதிரவெளி, அம்பந்தனாவெளி, பால்சேனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, பெல்லடிமடு. பனிச்சங்கேணி, மாவடிஓடை, மாங்கேணி, காயான்கேணி ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கல் சார்பாக வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகியுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் உரையாடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை வாகரைப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகளை புரியுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவசர வேண்டுகோள் விடுத்தார்.


ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி

இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகிய மரியோ மான்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியில் இருந்த கடந்த 13 மாத காலகட்டம் மிகவும் கடினமாகவும், வசீகரமாகவும் இருந்தது. நான் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை, அடுத்து பொறுப்பேற்கும் தலைவரும் முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளும் முயற்சியில் சர்வதேச அளவில் நம்பகமான நாடாக இத்தாலி மாறியுள்ளது என்றார்.
மரியோ மோன்டியின் அரசுக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்தை இழந்த மாண்டி தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து விட்டார்

சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேர் சுட்டுக் கொலை

ஈரான் நாட்டு எல்லைக்குள் சட்ட விரோதமாக கடக்க முயன்ற 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலிருந்து வந்த 11 பேர் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றனர்.
அப்போது அப்பகுதியிலிருந்து மறைந்திருந்த மர்ம கும்பலொன்று 11 பேரையும் சுட்டு கொன்று விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக பலரும் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உட்பட 9 பேர் பலி


பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாகிஸ்தானில் பேஷ்வார் மாகாணத்தின் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பேஷ்வார் மாகாண அமைச்சரும், அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவருமான பஷீர் பிலவ்ர் கலந்து கொண்டார்.
அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 முறை பஷீர் பிலவ்ருக்கு தெஹ்ரீக்- இ- தலிபான் பாகிஸ்தான் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு அந்த இயக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்றும் தகவல் துறை அமைச்சர் இப்திகார் ஹுசைன் கூறியுள்ளார்{புகைப்படங்கள்,}.





வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி?

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார். தற்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன் தீவிரமான வயிற்றுத் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்.
அவர் இப்பதவியில் இருந்து ஜனவரி மாதம் ஓய்வு பெறப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்தார்.
இப்பதவிக்கு ஜான் கெர்ரி தான் மிகச் சிறந்த தெரிவு என ஒபாமா பாராட்டினார்.
69 வயதாகும் கெர்ரி, ஒபாமாவுக்கு வெளிவிவகாரத்துறை விவகாரங்களில் ஆலோசனை தரக்கூடிய நெருங்கிய நண்பராகவும், வெளிவிவகார செனட் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள முதல் நியமனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

சனி, 22 டிசம்பர், 2012

ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியது தெற்கு சூடான்

ஐ.நா ஹெலிகொப்டரை தெற்கு சூடான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூடானிலிருந்து தனியாக பிரிந்த தெற்கு சூடானின் ஜோங்லெய் மாநிலத்தில், ஐ.நா ஹெலிகொப்டரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக தெற்கு சூடான் அரசு உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை முதலில் மறுத்த இராணுவம், ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறியது.
அதன் பின் போராளிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த சூடான் ஹெலிகொப்டர் என நினைத்து சுட்டதாக தெரிவித்தது.
இருப்பினும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிப் ஆகர் தெரிவித்தார்.
ஜோங்லெய் மாநிலத்தில் இயங்கும் டேவிட் யாவு யாவு தலைமையிலான போராளிக் குழுவிற்கு, சூடான் அரசு விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குவதாக தெற்கு சூடான் அடிக்கடி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


வடபழநியில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது


சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அரசு பஸ்

சென்னை வடபழனி பணிமனையில் இருந்து வடபழனி–குன்றத்தூர்(தடம் எண்: எம்.88) செல்லும் அரசு பஸ், நேற்று காலை வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் சென்றது. நேற்று பிற்பகல் குன்றத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போரூர் வழியாக வடபழனி நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டினார். கண்டக்டர் கருணாநிதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்


புகை வந்தது
 
மதியம் 1 மணியளவில் வடபழனி பஸ் நிலையத்துக்கு முன்பு ஆற்காடு சாலையில் சாலிகிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த என்ஜினில் இருந்து புகை வரத்தொடங்கியது. இதையடுத்து டிரைவர் தங்கவேல், பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதற்குள் என்ஜினில் இருந்து அதிகளவில் புகை வெளியே வர ஆரம்பித்தது.

இதனால் பயந்து போன டிரைவர் தங்கவேல், பயணிகள் அனைவரையும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடும்படி கூறி விட்டு, தானும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். பஸ்சில் பயணம் செய்த 40–க்கும் மேற்பட்ட பயணிகள், அலறியடித்துக்கொண்டு பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே முண்டியடித்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.

தீப்பிடித்து எரிந்தது

பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் தீ வேகமாக பரவி, கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.

சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டதால் அருகில் இருந்த கடைகளிலும் தீயின் அனல் பரவியது. எனவே கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதற்கிடையில் அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து மிகுந்த சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் எரிந்து கொண்டிருந்த பஸ்சை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

பஸ்சில் கரும்புகை வந்தவுடன் டிரைவர் அனைத்து பயணிகளையும் இறங்கச்சொன்னதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார்கள். தீ விபத்தில் எரிந்த பஸ்சை, போலீசார் வடபழனி பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்{காணொளி,}