siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 10 ஜனவரி, 2013

அதிர்ச்சியில் உறைந்து போனது மூதூர் பிரதேசம்!



மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள்.
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள்.
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்

வராத மாணவியை பள்ளியிலிருந்து நீக்கலாம். அமெரிக்க கோர்ட்

           
 

அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்' நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

வகுப்புகள் துவங்குவதற்கு முன்னும், மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்' என்றனர்.
இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், ""பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்' அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு,'' என்றார்

புதன், 9 ஜனவரி, 2013

பூமியைப் போலவே 1700 கோடி கிரகங்கள்! {காணொளி}

அதிர்ச்சித் தகவல் பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார் [காணொளி]

தாதியொருவரை பாலியலுக்கு அழைத்த சிங்கள மருத்துவர் கைது!

சிங்கப்பூர் ஷெங்கி பொது மருத்துவமனையொன்றில் தாதியொருவரை பல தடவைகள் பாலியல் வன்முறையாக தீண்ட முட்பட்ட இலங்கை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் அவர் குறித்த தாதியை பாலியல் ரீதியாக அணுக முட்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சேனக லியனகே எனப்படும் 37 வயதான மருத்துவர் 26 வயதான சிங்கப்பூர் தாதியை நேற்று முன்தினமும் இவ்வாறு பலவந்தமாக அணுகியதாக தாதி முறையிட்டதை அடுத்து மருத்துவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை திறனுடன் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அண்மையில், இடம்பெற்ற சில சம்பவங்களின் போது, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவு செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. விசாரணை என்ற பேரில் மருத்துவர்களுக்கு எதிராக பழிவாங்கல் இடம்பெற்றுள்ளன. இதனால் தற்போதுள்ள விசாரணைக் குழுவை களைக்க வேண்டும். எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளையும் ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல்!

அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்எம்ஏஎஸ் அன்சாக், நேற்று நல்லிணக்க அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்ட ஜோன் ஸ்ராவிரிடிஸ், மேற்கு கடற் பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரால் ரோஹான் அமரசிங்கவை மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது [புகைப்படங்கள்]
எச்எம்ஏஎஸ் அன்சாக் ஒரு போர்க்கப்பலாகும். இது கடற்படை ஹெலிகொப்டரை ஏற்றிச் செல்லக்கூடியது. 118 மீற்றர் நீளமுடைய இக் கப்பலில் 29 அதிகாரிகளும் 163 படையினரும் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி வரை இது இலங்கையில் தரித்திருக்கும். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல விசேட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர் என இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நேற்று முன் தினம் இரு ஜப்பானிய கப்பல்களும் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

18 மில்லியன் தரம் குறைந்த போலி காண்டம்கள். சுகாதாரத்துறை??

இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களில்தான், இவ்வகையான போலி காண்டம்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் தெரிவித்துள்ளது. Durex போன்ற தரமான நிறுவனத்தின் காண்டம்களை மட்டுமே உபயோகிக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள குடும்ப கட்டுப்பாடு அலுவலகம், போலி காண்டம்களை இனம் கண்டு, தவிர்க்குமாறு அறிவித்துள்ளது. மேலும் காண்டம் இறக்குமதி குறித்து புதிய வகையான சட்டதிருத்தம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது

பாணிபூரி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!

  

இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் பாணிபூரி விற்கும் நபர் தான் பயன்படுத்தும் பாத்திரத்தில் சிறுநீர் பிடிப்பதையும், பின்பு


திங்கள், 7 ஜனவரி, 2013

ரசாயன ஆலையின் கழிவுகள் கலந்ததால், குடிநீர் சப்ளை உடனே?

   

சீனாவில் உள்ள ஒரு ஆற்றில், ஆலையில் இருந்த கசிந்த ரசாயனம் கலந்ததால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஆலையில், குழாய் உடைந்து, "அனிலைன்' என்ற ரசாயனம், சுவாசாங் என்ற நதியில் கலந்தது.

இந்த நதியின் தண்ணீர், சாங்கி நதியில் இணைந்தது. ஹீபி மாகாணத்தில் உள்ள ஹான்டன் நகருக்கு, சாங்கி நதி தண்ணீர் தான், குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் ரசாயனம் கலந்த செய்தியை கேள்விப்பட்ட, ஹான்டன் நகர நிர்வாகம், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தியது.
பூச்சி கொல்லி மருந்து மற்றும் வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படும், "அனிலைன்' ரசாயனம், விஷ தன்மை வாய்ந்ததால், ஆற்று தண்ணீர், அணைக்கு சென்று சேராதவாறு, திசை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மனித உரிமை தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும்



சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இன்னும் எட்டவில்லை என்று அந்த நாடு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாருடனும் பேசுவதற்கும் இன்னும் காலம் வரவில்லை என்றும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளாதாக இலங்கையிலுள்ள பிரித்தானியா தூதுவர் ஜோன் ரென்கின் கூறியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மனித உரிமை தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு சிறிலங்கா அரசு கௌரவம் அளிக்க வேண்டுமென தனது நாடு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட? !

  


மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மடுக்கரை பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.


வெள்ளப் பெருக்கின் காரணமாக மடுக்கரை கிராமம் கடுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கி இருந்தனர்.

மடுக்கரை, பள்ளிமோட்டை, 75 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் அதிகளவானவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கும், உறவினர்களுடைய வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுள்ளனர்.{புகைப்படங்கள்}


 
 
எனினும் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வவரை தமது வீடுகள் தற்போது வரை வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும், தாம் தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.


இந்த நிலையில் குறித்த பாடசாலையில் உள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார். இதன் போது மடுக்கரை பாடசாலையில் தங்கியுள்ள குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தாங்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள போது அதிகாரிகள் எம்மை உடன் பாடாசாலையை விட்டு வெளியேருமாறு பணித்துள்ளனர்.






தற்போது இங்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளோம். எங்களில் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தொடர்ந்தும் சில தினங்களுக்கு பாடசாலையிலே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.